காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இந்த காணமல் போனவர்கள் ஒன்றும் சிறுவர்கள் அல்ல, திருவிழாவில் தொலைந்து போவதற்கு. இவர்களில் பட்டப்படிப்பு படித்தவரும் உண்டு, பள்ளியின் பக்கம் நெருங்காதவரும் உண்டு. டாக்டர்களும் உண்டு, மருத்துவத்திற்காக அவர்களை காண செல்பவர்களும் உண்டு. விஞ்ஞானிகளும் உண்டு, வெட்டியாய் இருப்பவர்களும் உண்டு.
ஆனால் இவர்களுக்குள்ள ஒற்றுமை என்னவெனில் இவர் காணாமல் போகவில்லை, கடத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதே.
இவர்கள் ஏன் கடத்தப் படவேண்டும்?
அவர்கள் முஸ்லீம்களாக இருக்கலாம். ஒருவரை குற்றம் சுமத்த இதனை விட பிரதான காரணம் இன்று இந்த உலகத்தில் தேவையா என்ன?
இவர்களை கடத்தியது யார்?
இது இடங்களைப் பொறுத்து மாறுபடும். ஆனால் இதில் முன்னிலை வகிப்பது நம் பெரியண்ணன் அமெரிக்காதான்.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா?
ஆம், கண்டிப்பாக.
விடைகள் இல்லாத கேள்விகளே இல்லை. இந்த கேள்விக்கு விடை மிகவும் எளிது. இன்னும் சொல்லப் போனால், யாவரும் அறிந்ததே. இவர்களை கண்டுபிடிக்க மண்ணை தோண்டவேண்டும், அல்லது குவாண்டனாமோ,அபூ கரீப் போன்ற சிறைகளுக்கு செல்ல வேண்டும்.
அங்கே இவர்கள் என்ன செய்கிறார்கள்?
இவர்கள் அங்கே பயிற்சி எடுக்கிறார்கள்.
என்ன பயிற்சி?
இது கூட தெரியாதா? அடுத்து எங்கே குண்டு வைக்கலாம், எந்த கோபுரத்தை கார், விமானம், கப்பல், ஏன், இனி வரும் காலங்களில் ராக்கட்டைப் பயன்படுத்தியும் கூட தகர்க்கலாம் என்று.
இவர்களுக்கு யார் பயிற்சி கொடுக்கிறார்கள்?
நமது சர்வதேச காவலாளி அமெரிக்கா.
ஆம், இது தான் காணாமல் போனவர்களின் நிலை. ஒன்று அவர்கள், கொல்லப்பட்டிருக்க வேண்டும், இல்லையேல் உலகெங்கிலும் உள்ள அமெரிக்காவின் சித்திரவதை கூடங்களில் சித்திரவதை செய்யப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும்.
இந்த காணாமல் போகும் (ஆள்கடத்தல்) பழக்கம், முதன் முதலில் 1970 ல் லத்தீன் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர் விரைவில் இது மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது.
இதில் என்ன விஷேசம் என்றால், அதிகாரத்தில் இருப்பவர்கள், தனக்கு பிடிக்காத ஒருவரை கைது செய்து, பின்னர் அவரை நீதி மன்றத்தில் நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி தருவதை விட, அவர்களை யாருக்கும் தெரியாமல், எங்காவது அடைத்து விடலாம், இல்லை அவர்கள் விருப்பப்படி சித்திரவதை செய்து கொன்று புதைத்து விடலாம். வேலை மிச்சம், நேரமும் மிச்சம். நல்ல பொழுது போக்கும் கூட.
இந்த பழக்கத்தை இன்று இந்தியா உட்பட பல நாடுகள் பின்பற்றி வருகின்றது. சமீபத்தில், The Week பத்திரிகை வெளியிட்ட கட்டுரை ஒன்று இந்தியாவில் இயங்கி வரும் ரகசிய சித்திரவதை கூடங்கள் பற்றி வெளிச்சம் போட்டு காட்டியது.
இன்று உலகிலுள்ள நம் சமுதாய மக்கள் பல பேரின் நிலை இது தான். தன் பிள்ளைகள், தந்தை, தாய், இவர்கள் உயிருடன் உள்ளனரா, இல்லை இறந்துவிட்டனரா என்று தெரியாத நிலை. நம்பிக்கையையும் துயரத்தையும் ஒரு சேர தாங்கிக்கொண்டு தவிக்கின்றனர்.
இந்த அதிகார வர்க்கத்தினரால் கடத்தப்படுபவர்களுகேன்றே தனியாக ஒரு நாள் அனுசரிக்கப் பட்டு வருகிறது, August 30. இந்த நாளில் நமக்கு கிடைத்த செய்தி இந்த வருடம் இந்த கொடுஞ்செயல் 20 க்கும் மேலான நாடுகளில் கடைபிடிக்கப் படுகிறது.
ஐ.நா. வின் பிரிவு ஒன்று இது பற்றி கூறுகையில், 1980 ல் இருந்து இதுவரை 50000 வழக்குகள் இது போன்று காணாமல் போனவர்கள் பற்றி அதனிடம் வந்துள்ளது என்று கூறியுள்ளது. ஐ.நா. வின் கணக்கே இவ்வளவு என்றால், அவர்களின் கணக்கில் அடங்காதவர்களின் எண்ணிக்கை எத்தனை இருக்கும்?
மேலும் ஐ.நா வின் கூற்றுப்படி, இது போன்ற சம்பவங்களால், அதிகமாக பாதிக்கப் படுவது பெண்களும் குழந்தைகளும் தான். பெண்கள், தங்கள் குழந்தைகளை வளர்க்க போதிய வருமானமில்லாமல் தவிக்கின்றனர்.
இராக்கில் அமெரிக்க நடத்திய இது போன்ற கொடூரங்களால், அங்குள்ள பெண்களில் சிலர் அண்டை நாடுகளில் தகாத காரியங்களில் ஈடுபட்டு தங்கள் பொருளாதார தேவையை பூர்த்தி செய்கிறார்கள் என்ற செய்தியும் உண்டு.
இது அல்லாமல் கடத்தப்படுபவர் சித்திரவதைக்கு உள்ளாவதுதான் இன்னும் கொடுமை. அவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகளின் அட்டவணையை நம் பிளாக்கில் பதிவு செய்தால் அதுவே பல பக்கங்களை நிரப்பிவிடும்.
அங்கே அவர்கள் எதற்காக சித்திரவதை படுத்தப்படுகிறார்கள் தெரியுமா? ஏதாவது மேற்கத்திய நாடுகளில் , அமெரிக்காவின் C.I.A வும், இஸ்ரேலின் MOSSAD- உம் நடத்திய குண்டு வெடிப்புகளுக்கு இவர்கள் பொறுப்பேற்கத் தான். அவர்களுடைய சித்திரவதைகளில் இவர்களை என்ன செய்யச் சொன்னாலும் செய்து விடுவார்கள்.
செப்டம்பர் 11, 2001. உலக வர்த்தக மையத்தின் தகர்ப்புக்கு பிறகு நடந்த ஆட்கடத்தலில் பெரும்பாலானோர் அமெரிக்காவின் ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

இன்று புதிதாய் வெள்ளை மாளிகையில் நுழைந்திருக்கும் கருப்பரும் அதையே தான் சொல்கிறார். இவரிடம் மக்கள் அதிகமாக எதிர்பார்த்தார்கள். இவர் ஏதாவது நல்லது செய்வார் என்று நம்பினார்கள். மாற்றம் என்ற வார்த்தையை தன் தேர்தல் பிரச்சார அடிப்படையாய் வைத்து ஆட்சியை மட்டும் மாற்றிவிட்டார். மற்ற எந்த மாறுதலும் நடந்ததாக தெரியவில்லை.

அவர் ஒழித்தும் விட்டார். மனிதனை வைத்து மனிதனை கொல்லும் முறையை ஒழித்து விட்டார். இன்று ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தானின் எல்லையோர பகுதிகளில் தாலிபான்களை வேட்டையாடுகிறேன் என்கிற பேரில் ஆளில்லா விமானங்கள் மூலம் அப்பாவி மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? புஷ் நம்மை முறைத்துக்கொண்டு அடித்தார், ஒபாமா நம்மிடம் சிரித்துக்கொண்டே அடிக்கின்றார்.
அதனால் இவரும் இந்த கொடூர முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புவது இலவம் காத்த கிளியின் கதையில் தான் முடியும்.
இந்த முறையை உலகளாவிய அளவில் முடிவிற்கு கொண்டுவர பெருமளவு முயற்சிகள் செய்யப்பட்டு வந்தாலும் இதற்க்கு, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இந்த முயற்சிக்கு தடை போடுகின்றன.
80 லில் இருந்தே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மொத்தம் 20 நாடுகள் கையெழுத்திட்டால் மட்டுமே இந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இது வரை 13 நாடுகள் இந்த கொடுமைக்கு எதிராக கையெழுதிட்டுள்ளனர். எப்படியும் அமெரிக்கா 20 நாடுகள் தீவிரவாத்திற்கு எதிராக இணைவதை சகித்துக் கொள்ளபோவதில்லை. ஏதாவது சூழ்ச்சி செய்து தடுத்துவிடும். அப்படியே 20 நாடுகள் சேர்ந்து கையெழுதிட்டாலும் அதனை அமெரிக்கா மதிக்கவா போகிறது. அமெரிக்காவும், அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேலும் காற்றில் பறக்கவிட்ட சர்வதேச சட்டங்கள் ஏராளம். ஏராளம்.....
அதையும் தாண்டி இந்த கொடுமைகள் முடிவிற்கு வந்தால், இதுவரை கடத்திச் சென்றவர்களை காப்பாற்ற முடியாவிட்டாலும் இனியாவது இந்த கொடூரம் நடக்காமல் தடுக்கலாம். இன்று சாபிரா ஜாலூப் நிம்மதியாய் இருப்பது போன்று மற்ற தாய்மார்களும் நிம்மதியாய் இருக்கலாம். ஆம், சாபிராவின் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி சாபிராவிற்கு கிடைத்துவிட்டது. என் மகன் அடக்கம் செய்யப்பட்டுவிட்டான், இனி நான் அவனருக்கில் அடக்கம் செய்யப்படுவேன் என்று கூறியுள்ளார்.
தகவல் திரட்ட உதவியது அல்-ஜசீரா.
-------------------------------------------------------------------------------------------------
