ஹமாஸின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து சிறை வைப்பு

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

காசாவில் உள்ள கைதிகளுக்கான அமைச்சகம், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் ஹமாஸின் 25 பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து வைத்துள்ளனர் என்றும் மேலும் 2 மந்திரிகளை சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சகம் கூறியதாவது, "இந்த 25 பேர்களில் அல் கலீல் பகுதியிலிருந்து 10 பேரும், ரமல்லாவிலிருந்து 6 பேரும், ஜெருசலேமிலிருந்து 4 பேரும், பெத்தெலெஹெமிலிருந்து 3 பேரும், நபுளுஸ் மற்றும் ஜெரிகொவிலிருந்து தலா ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதில் 17 பேர் பல்வேறு விதமான தண்டனைகள் விதிக்கப்பட்டு உள்ளனர், 6 பேர் எந்த வழக்கும் குற்றமும் சுமத்தப்படாமல் ஆட்சிமுறை சார்ந்த காவலிலும், மேலும் இரண்டு பேர் பாதுகாப்பிலும் வைக்கப்பட்டுள்ளனர்."

இந்த அமைச்சகம், "அப்பாஸின் பாலஸ்தீனிய அதிகாரத்தையும் (Palestinian authority) அரபு மற்றும் மேற்கத்திய பாராளுமன்றங்கள் இது தொடர்பான எந்த ஒரு அக்கறையையும் காட்டாமல் இருப்பதற்காக கண்டனம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய இரு தரப்பிலிருந்து எந்த ஒரு முயற்சியும் எடுக்கப் படவில்லை என்று அந்த அமைச்சகம் மேலும் கூறியது.
ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளை தொடர்ந்து சிறைவைத்திருப்பது மனித உரிமைகள், கொள்கைகள் என்று கொக்கரிக்கும் சர்வதேச சமுதாயத்தின் துரோகத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது."

நன்றி
Palestine Info.

Posted by Wafiq on Sunday, October 11, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for ஹமாஸின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து சிறை வைப்பு

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner