ஈராக்கிற்கு செல்லவிருந்த 3,500 அமெரிக்கத் துருப்புகள் ரத்து
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
வாஷிங்டன்: ஈராக்கிற்கு மேற்கொண்டு 3,500 துருப்புகள் செல்லவிருந்ததை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக பென்டகன் சார்பில் சனிக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கிலிருந்து ஜனவரி மாதம் இந்தப் படை புறப்படுவதாக இருந்தது.
ஈராக்கில் பாதுகாப்பு சூழ்நிலையை முற்றிலும் மதிப்பீடு செய்த பிறகும், ஈராக்கிய பாதுகாப்புப் படையினர் ஈராக்கிய மக்களையும், நிறுவனங்களையும் பாதுகாப்பதில் முன்னேற்றம் அடைந்து வருவதை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லெப்டினென்ட் கர்னல் எரிக் பட்டர்பாக் (Eric Butterbaugh) கூறியுள்ளார்.
அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தனது அனைத்து போர் துருப்புகளையும் ஈராக்கிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் 50,000 துருப்பினர் வரை ஆலோசனைப் பணியில் நீடிப்பார்கள். அவர்களும் 2011-ம் ஆண்டின் இறுதிக்குள் திரும்பி விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
நன்றி,
இந்நேரம்.