கோவாவில் குண்டு வெடிப்பு - இந்துத்துவா தீவிரவாதிகளுக்கு தொடர்பு
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
கோவாவின் மர்கவோ நகரில் கடந்த வெள்ளியன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய சாது (?) பிரக்யா சிங்குடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப் படுகிறார்கள். இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார். சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
இந்த குண்டு வெடிப்பு கடந்த வெள்ளி இரவு 9:30 மணியளவில் நடைபெற்றது. இது குறித்து போலீசார் கூறுகையில், "ஒரு ஸ்கூட்டரில் வைக்கப் பட்டிருந்த வெடிபொருள் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் வெடித்து சிதறியது" என்று கூறினர்.
இதில் கொல்லப்பட்ட மால்குண்டா படில் ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தான் என்ற அமைப்புடன் தொடர்புடையவர் என்று தெரியவருகிறது. இந்த சனாதன் சன்ஸ்தான் அமைப்பிற்கும் மலேகான் குண்டு வெடிப்பை நடத்தியதாக கூறப்படும் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்யா சிங்கிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சனாதன் சன்ஸ்தான் அமைப்பின் தலைமை அலுவலகத்தை போலீஸார் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி இரவு சோதனையிட்டனர். இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் இறந்தவன் பற்றியும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஹிந்துத்துவ தீவிரவாதியை பற்றியும் விபரங்கள் இன்னும் தெரியவில்லை.
நன்றி
NDTV
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த வெடி குண்டு விபத்து நடந்திருப்பதால் இந்த தீவிரவாதிகள் என்னென்ன சதிச்செயல்களை செய்ய திட்டமிட்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. தீபாவளி அன்று கோயில்களில் குண்டு வெடுப்பு நடத்தி பின்னர் அதன் பலியை முஸ்லீம்கள் மீது வழக்கம் போல் போட திட்டமிட்டுருக்கலாம், இதன் மூலம் தாங்கள் நாடியவாறு இந்து முஸ்லீம் கலவரத்தை தூண்டி வழக்கம் போல் அதில் குளிர் காயலாம் என்று எண்ணியிருந்தனர் போலும்.