நரோடா பாட்டியா கலவரத்தில் தொடர்புடையவனுக்கு பிணை மறுப்பு

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

"95 பேரை பலி கொண்ட நரோடா பாடியா வழக்கு இந்த நவீன உலகில் தனித்துவமானது என்றும் இந்த சம்பவம் சட்டத்தின் அடித்தளத்தையே பலவீனமடைய செய்திருக்கின்றது" என்றும் குஜராத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் அபிலாஷா குமாரி கூறியுள்ளார்.

இவர் இதனை, இந்த வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திர சாட்டர்ஜீயின் பிணை மனுவை ரத்து செய்து விட்டு இதனை கூறினார். இந்த சுபாஷ் சந்திர சாட்டர்ஜீயை சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு விசாரணை குழு கடந்த நவம்பர் கைது செய்தது.

"இந்த வழக்கு மற்ற எந்த ஒரு சாதாரண வழக்கு போன்றதல்ல. இந்த வழக்கின் பின்னணி பொதுமக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை நாம் தட்டிக்கழிக்க முடியாது என்று குஜராத் உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.

உண்மையில் இந்த வழக்கு பல மக்களை வேண்டுமென்றே கொன்று குவித்தது தொடர்புடையது. இன்றைய நவீன காலத்தில் இது போன்று வேறு எந்த நிகழ்வுகளும் நடந்ததில்லை. இது போன்ற சம்பவங்கள் மக்கள் மீதும் தேசத்தின் மீதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை" என்று அந்த நீதி மன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தர்ஜி, ஹுசைன் நகர் மக்களை தீயிட்டு கொளுத்திய சம்பவத்தில் தொடர்புடையவன். இந்த சம்பவத்தில் 95 உயிரிழந்தனர்.

நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா.

Posted by Wafiq on Monday, October 19, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for நரோடா பாட்டியா கலவரத்தில் தொடர்புடையவனுக்கு பிணை மறுப்பு

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner