உய்கூர்: மேலும் 6 பேருக்கு மரண தண்டனை
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
பீஜிங்: சீனா, கடந்த வியாழன் அன்று ஜிங்க்ஜியாங் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி மேலும் 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதனால் இந்த சம்பவத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இதன்மூலம் 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆறு பேர்களில் மூன்று பேரின் மரண தண்டனை தற்காலிகமாக 2 வருடங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களிலிருந்து மொத்தம் 21 நபர்கள் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றங்களில் கொலை, வேண்டுமென்றே பொருட்களுக்கு சேதம் விளைவித்தல், பொருட்களை வேண்டுமென்றே தீயிட்டு எரித்தல், கொள்ளை ஆகியன அடங்கும். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து உரூம்கியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வியாழன் சீனாவின் ஹான் இனத்தை சேர்ந்த ஹான் ஜுன்போ என்றவனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வித்தது. இவன் உய்கூர் முஸ்லிம் ஒருவரை அடித்து கொலை செய்தவனாவான். மற்றுமொரு ஹான் இனத்தை சேர்ந்த லியூ போ என்பவனுக்கு 10 வருட காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 5 பேர்கள் உய்கூர் பகுதி முஸ்லீம்கள் என்று நம்பப்படுகிறது. மற்றவர்களைப பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
உரூம்கி நகராட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "அரசு குற்றவாளிகளின் பெயர்களை மற்றும் அறிவித்தது. மற்ற எந்த விவரங்களையும் தரவில்லை. அப்பகுதி நீதிமன்றத்தின் அதிகாரிகளை இது தொடர்பாக தொடர்புகொள்ளவும் இயலவில்லை" என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, "உய்கூர் மக்கள் சீனா உய்குர் மக்களை அடக்கி ஒடுக்குவதை உலகம் தடுக்கும் என்று நம்புவதை தவிர இந்த மக்களுக்கு வேறு வழியில்லை" என்று கூறினர்.
சீனாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு அமெரிக்காவில் வசித்து வரும் ரேபியா காதர் இந்த மரண தண்டனைகள் குறித்து கூறுகையில், "இந்த தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே இன்னும் கோபத்தை தான் அதிகப்படுத்தும்" என்று கூறினார்.
தீர்ப்பளிக்கப்பட்ட இந்த 21 பேர்களை தவிர போலீஸார் இன்னும் 700 இந்த கலவரம் தொடர்பாக கைது செய்துள்ளனர்.
சீன மக்கள் தொகையில் சுமார் 8 மில்லியன் உய்கூர் மக்கள் தாங்கள் அரசியல் ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும், கலாசார ரீதியிலும் ஒடுக்கப்படுவதாக வெகு நாட்களாக கூறி வருகின்றனர்.
அந்த மக்கள் கூறியதாவது, "ஜூலையில் நடந்த அந்த கலவரம், போலீசார் உய்குர் மக்களின் அமைதிப் பேரணியை கலைத்ததாலேயே ஏற்பட்டது" என்று கூறுகின்றனர்.
நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா