உலகில் மூன்றில் ஒரு பங்கு குழந்தை திருமணம் இந்தியாவில்!!!
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

குழந்தைகளுக்கான முன்னேற்றம் என்ற தலைப்பிட்ட ஒரு அறிக்கையில், படிப்பறிவு வெகுவாக வளர்ந்துள்ள போதிலும் பாரம்பரியம், மற்றும் மத நம்பிக்கைகள் இந்தியாவில் குழந்தை திருமணத்தின் காரணமாக இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
உலகின் மற்ற பகுதிகளை விட தெற்கு ஆசியாவில் தான் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன என்றும் மேலும் இதனால் பதிவு செய்யப்படாத பிறப்புகளும் அதிகரிக்கின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. தெற்கு ஆசியாவில் இந்தியா மற்றும் நேபாளில் தான் அதிகமாக குழந்தைகள் திருமணங்கள் நடக்கின்றன என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
தெற்கு ஆசியாவில் 2007 ல் பிறந்த 47% குழந்தைகள் பதிவு செய்யப்படாத பிறப்புகளில் பிறந்தவை என்று கூறுகின்றது. இந்தக் கணக்கெடுப்பில் மொத்தமுள்ள 24 மில்லியன் குழந்தைகளில் இந்தியாவில் மட்டும் 16 மில்லியன் அடங்கும்.
"ஒரு சமுதாயம் அதனுடைய இளைய தலைமுறைகள் குழந்தை திருமணத்திலும், பாலியல் தொழிலிலும், அவர்களின் அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டால் அந்த சமுதாயம் சிறந்து விளங்க முடியாது" என்று UNICEF தலைவர் Ann Veneman கூறினார்.
குழந்தைகள் மீதான உரிமை மீறலின் ஆழத்தை புரிந்து கொள்வது தான் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழ்நிலைகள் உருவாக்குவதிலும் அவர்களுடைய முழு ஆற்றலை வெளிப்பட செய்வதற்கும் நாம் எடுத்து வைக்க வேண்டிய முதல் அடி என்று அவர் கூறினார்.
நன்றி
NDTV
