காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு காரணம் அப்பாஸ்?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்த வாக்கெடுப்பை பாலஸ்தீனின் அப்பாஸ் கும்பல் தள்ளிப் போட்டதற்கு ஒரு வீடியோ டேப் தான் காரணம் என்று பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான ஷகாப் தெரிவித்துள்ளது.

நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்த செய்தி என்று அந்த நிறுவனம் கூறியதாவது, பாலஸ்தீன் அத்தாரிட்டியின் பிரதிநிதிகள் வாஷிங்கடனில் நடந்த கூட்டம் ஒன்றில், இந்த வாக்கெடுப்பை தள்ளி போடுவது குறித்த இஸ்ரேலின் வேண்டுகோளை முதலில் நிராகரித்தனர்.

ஆனால் Brigadier Eli Avraham அந்த பிரதிநிதிகளிடம் ஒரு வீடியோ காட்சியை காண்பித்ததும் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர். அந்த வீடியோவில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் எஹூத் பாரக் இருவருக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதில் அப்பாஸ் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரிடம் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை தொடருமாறு கேட்கின்றார். பாரக் இதற்கு தயக்கம் காட்டுகிறார். இவர்களுடன் அந்த சந்திப்பில் இருந்த இஸ்ரேலின் முன்னால் வெளியுறவுத்துறை அமைச்சார் Tzipi Livni அப்பாஸின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றார். இதனை அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிபியா ஐ.நா வின் பாதுகாப்பு கவுன்சிலிடம் இஸ்ரேலின் போர் குற்றங்கள் தொடர்பான Richard Goldstone (தென் ஆப்ரிக்காவின் முன்னாள் நீதிபதி) யின் அறிக்கையை கருத்தில் எடுத்துக்கொள்வது தொடர்பாக ஒரு அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது. ஷபாபின் இந்த செய்தி, இது நடந்த அதே நாளில் வெளியிடப்பட்டது.

பாலஸ்தீன தொலைக்காட்சி, அப்பாஸ் பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மாலிக்கியை லிபியாவின் இந்த ஐ.நா வுடனான கூட்டத்திற்கு இந்த அறிக்கை தொடர்பாக பேச அனுப்பி வைப்பார் என்று கூறியது.

மூன்று வாரங்கள் நீடித்த இஸ்ரேலின் காசா மீதான இந்த தாக்குதலில் 1400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஷபாப் செய்தி நிறுவனம் மேலும் கூறியதாவது, Brigadier Eli Avraham மேலும் ஒரு தொலைபேசி பதிவையும் அப்பாஸின் பிரதிநிதி குழுவிடம் போட்டுக் காட்டினார். அதில், Israeli chief of staff bureau வின் இயக்குனரான Dov Weissglas மற்றும் பாலஸ்தீன ஆட்சியின் பொதுச்செயலாளர் அல் தைய்யுப் அப்துல் ரஹீம் இடையேயான பேச்சுவார்த்தை அடங்கியிருந்தது.

"அந்த பேச்சுவார்த்தையில் Dov Weissglas யிடம், ஜபால்யா மற்றும் அல் சாதியா அகதிகள் முகாமிற்குள் இஸ்ரேலிய ராணுவம் நுழைவதற்கு சூழ்நிலைகள் சரியாக உள்ளது என்றும் இந்த இரண்டு அகதிகள் முகாம்களும் வீழ்ந்துவிட்டால் காசாவில் ஹமாஸின் ஆட்சி முடிவிற்கு வந்துவிடும்" என்றும் அவர் கூறுகிறார்.

"இதற்கு Weissglas, அப்துல் ரஹிமிடம் இந்த இராணுவ நடவடிக்கை நடந்தால் அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழக்க நேரிடும் என்று கூறுகிறார். அதற்கு அப்துல் ரஹீம், அவர்கள் தான் ஹமாசுக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்தார்கள், அதனால் அவர்கள் தங்கள் விதியை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டனர், நாங்கள் அல்ல", என்று கூறுகிறார்.

இவ்வாறு அந்த தொலைபேசி உரையாடல் பதிவில் கூறப்பட்டதாக ஷகாப் செய்தி நிறுவனம் கூறுகின்றது.

ஷகாப் மேலும் கூறியதாவது, "பலஸ்தீன குழு இந்த வாக்கெடுப்பை தள்ளி போடாவிட்டால் இந்த தொலைபேசி பதிவையும் வீடியோ பதிவையும் ஐ.நா விடமும் பத்திரிக்கையாளர்களிடமும் ஒப்படைத்து விடுவோம்" என்று மிரட்டியதாக கூறியது.

இது சமயத்தில் கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பாலஸ்தீனியர்கள் தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பை இழந்து விட்டனர் என்று கூறினார்.

பாலஸ்தீனியர்கள் இந்த வாய்ப்பை நழுவ விட்டதனால் அடுத்த மார்ச் மாதம் வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது

மேலும் பார்க்க

நன்றி
அல் ஜசீரா.

-------------------------------------------------------------------------------------------------
ஷகாப் செய்தி நிறுவனத்தின் இந்த புகார் உண்மையாக இருந்தால், இந்த பதவி வெறி பிடித்த அரசியல் மிருகங்களைப் போல் இந்த பூமியில் கேவலமான ஜென்மங்கள் யாரும் இருக்க முடியாது.

Posted by Wafiq on Wednesday, October 07, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு காரணம் அப்பாஸ்?

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner