யூதனின் கைக்கூலி அப்பாஸ்.

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஹாமாஸின் மூத்த உறுப்பினர் ஒருவர், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், ஐ.நா வின் வாக்கெடுப்பை தள்ளி போடுவதற்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறினார். இந்த வாக்கெடுப்பு மூலம் இஸ்ரேல் காசாவில் கல்நெஞ்சம் கொண்டு நடத்திய போர் குற்றங்களுக்காக அதன் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும்.

மஹ்மூத் அல் ஷஹர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், "மஹ்மூத் அப்பாஸ் இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மாற்று கருத்து தெரிவிப்பதன் மூலம் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான மிகப் பெரிய குற்றத்தை செய்து கொண்டு இருக்கிறார்" என்று கூறினார்.

"அவர் இஸ்ரேல் காசாவில் நடத்திய வான் கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை தாமதப்படுத்துவதன் மூலம், இஸ்ரேலிய இராணுவ தலைவர்களை ஹமாஸையும், ஹமாஸை ஆதரித்து தேர்தலில் ஒட்டு போட்ட மக்களையும் கொல்வதற்கு இஸ்ரேலை ஆதரிக்கின்றார் என்று அவர் கூறினார்.

அவர் தன் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இவர் மேல் இது குறித்து ஒரு நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், அவர் எந்த ஒரு பாலஸ்தீன மக்களுக்கும் பிரதிநிதியாக இல்லை" என்று கூறினார்.

மேற்குக் கரையின் ரமல்லா நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் ஐ.நா வின் வாக்கெடுப்பை தள்ளி போடுவது குறித்து அப்பாஸின் கட்சி எடுத்த முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டக்காரர்கள் ஆர்பாட்டத்தின் போது தாங்கிய பெயர் பலகைகளில் "உயிர் தியாகிகளின் இரத்தத்திற்கும் பாலஸ்தீன மக்களின் காயங்களுக்கும் களங்கம்" என்று எழுதியிருந்தனர்.

இந்த முடிவு, உயிர் தியாகிகளின் முதுகிலும் இருதயங்களிலும் கத்தியை சொருகியிருக்கிறது" என்று ஆர்பட்டக்காரர்களில் ஒருவரான ஜமால் அல் ஜும்மா கூறினார்.

ஜெருசலேத்திலும் ஆர்பாட்டங்கள் நடந்தன, இங்கு ஆர்பாட்டக்காரர்கள் அப்பாஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினர்.

'இந்த முடிவு குறித்து அரசு எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றது என்றால் நாங்கள் இந்த அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்' என்று ஜெருசலேம் கூட்டணியின் தலைவர் முஹம்மத் ஜதல்லாஹ் கூறினார்.

ஐரோப்பாவின் 32 பலஸ்தீனிய குழுக்கள் அப்பாஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அந்த குழுக்கள், "இந்த அறிக்கையின் ஒப்புதலை தாமதப்படுத்துவது, யூதர்கள் பாலஸ்தீனில் நடத்திய கொடுமைகளுக்கு எந்த அளவிற்கும் குறைவானது இல்லை" என்று கூறியது.

ஐ.நா வின் 49 உறுப்பினர்கள் தாக்கல் செய்த இந்த அறிக்கையை அமல் படுத்துவதன் மூலம் போர் குற்றங்கள் செய்த இஸ்ரேலிய அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க இயலும்.

575 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பாலஸ்தீனிய போராளிகள் இருவர் மீதும் போர் குற்றங்களை சுமத்தியுள்ளது. ஆனால் இந்த குற்றங்கள், மக்களை தாக்கியதற்கும் அச்சமுற செய்ததற்குமான காரணங்களால் இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டு சற்று அதிகமாகவே உள்ளது.

ஆனால் கடந்த வெள்ளியன்று நடந்த கவுன்சிலில் இந்த அறிக்கையை அமல்படுத்துவதை பாலஸ்தீனிய மக்களுக்கான பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அடுத்த மார்ச் வரை தள்ளிபோடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

விமர்சகர்கள், அப்பாஸ் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கி நடந்து கொண்டார் என்று கூறினார்கள். அப்பாஸ் இதனை மறுத்துள்ளார்.

இந்த வாக்கெடுப்பை தள்ளிப் போட்டது நாங்கள் இல்லை, நாங்கள் ஐ.நா வின் உறுப்பினர்கள் இல்லை என்று கூறினார்.

மேலும் அனைத்து அராபிய சகோதரர்களும் ஐ.நா வின் மனித உரிமை கழகத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

மேற்குக் கரையில் மனித உரிமை அமைப்புகள் மற்றும் அப்பாஸின் சொந்த கட்சியான பதஹ் உட்பட பாலஸ்தீன அரசியல் பிரிவுகள் மத்தியில் அப்பாஸிற்கு எதிரான கருத்து மிகவும் வலுத்து வருகிறது.

காசாவை கட்டுப்படுத்தி வரும் ஹமாஸ், இப்போதைய சூழலில் பதஹ் கட்சியுடன் எந்த உடன்பாடும் வைத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

எகிப்து ஹமாஸையும் பதஹ் கட்சியையும் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி தேசிய ஒற்றுமை காண பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால் அல் ஷஹர், "பாலஸ்தீன் அத்தாரிட்டியின் இந்த முடிவு, பேச்சுவார்த்தை என்ற ஒன்றை அர்த்தமற்றதாகிவிட்டது" என்று கூறினார்.

"நான் இந்த பேச்சு வார்த்தையை தனிப்பட்ட முறையில் தள்ளிப்போட விரும்புகின்றேன் ஏனென்றால் கொல்லப்பட்ட எங்கள் மக்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்த இந்த கிரிமினலுடன் அமர்ந்து எங்களால் பேச்சு வார்த்தை நடத்த இயலாது" என்று கூறினார்.

பதஹ் கட்சியின் உள்ளேயே இந்த முடிவிற்கு பெரும் அதிருப்தி கிளம்பியுள்ளது. இந்த தவறை சரி செய்ய பல ஆண்டுகள் பிடிக்கும் என்று பதஹ் கட்சியின் பிரமுகர் ஒருவர் கூறினார்.

சலாம் பையாத், அப்பாஸின் பிரதம மந்திரி இந்த அறிக்கையை உடனே அமுல் படுத்தியிருக்க வேண்டும் என்றும் பாலஸ்தீனிய திட்டமிடுதல் மந்திரியான அலி ஜர்பாவி இந்த முடிவு ஆச்சர்யம் அளிக்கின்றது என்று கூறினார்.

சிரியாவும் அப்பாஸின் இந்த முடிவை வன்மையாக கண்டித்துள்ளது, இதனால் அப்பாஸின் சிரியா பயணம் தள்ளிப் போடப்பட்டுள்ளது.

இந்த மூன்று வார காசா மீதான தாக்குதலின் போது 1400 க்கும் மேலான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் மூன்றில் ஒரு பாதி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள். இஸ்ரேலின் தரப்பில் 10 வீரர்கள் மற்றும் 3 போது மக்கள் கொல்லப்பட்டனர்

நன்றி
அல் ஜசீரா
---------------------------------------------------------------------------------------------------------------------------

நடந்த இந்த நிகழ்வு அப்பாஸ் யூதர்களின் நேரடி கையாள் என்பதை நிரூபித்துள்ளது. சிறிது சிறிதாக பாலஸ்தீன மக்களுக்க செய்து வந்த கொடுமைகள இந்த விவகாரத்தில் முழு வீச்சில் செய்துள்ளார். முன்பு ஆட்கடத்தல், ஹமாசின் ஆதரவாளர்களை துன்புறுத்துவது, அநியாயமாக சிறைபிடிப்பது போன்ற செயல்களை அப்பாசின் ஆதரவாளர்கள் செய்து வந்தனர். பார்க்க தபால் பெட்டியின் முந்தைய பதிவுகள்...

Posted by Wafiq on Tuesday, October 06, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for யூதனின் கைக்கூலி அப்பாஸ்.

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner