இல்லாத கேப்டன் ஷர்மா - 26/11 நடந்தது என்ன?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தங்களுக்கு எந்த கேப்டன் ஷர்மாவையும் தெரியாது என்று கூறியுள்ளனர். மும்பை 26/11 தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்திடம் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கேப்டன் R.K.Sharma என்று யாரையும் தெரியாது என்று கூறியுள்ளனர். இந்த கேப்டன் R.K.Sharma தலைமையிலான ஒரு தேசிய பாதுகாப்பு படை பிரிவு ஹோட்டல் ஒபெராயில் தீவிரவாதி ஒருவரை சுட்டுக் கொன்றதாக சிறப்பு நீதி மன்றத்திடம் ஒரு சாட்சி கூறியுள்ளார்.

நீதி மன்றம் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த கேப்டன் ஷர்மாவை நீதி மன்றத்திற்கு அழைத்து இந்த சம்பவம் குறித்து மேலும் விபரங்கள் தருமாறு கோரியது. இந்த கேப்டன் ஷர்மா குறித்து பாதுகாப்பு அதிகாரி ராஜேஷ் கடம் நீதி மன்றத்தில், தான் கேப்டன் ஷர்மா தலைமை தாங்கிய குழுவில் இருந்ததாகவும், இந்த குழு தான் ஹோட்டல் ஒபெராயில் ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றதாகவும் கூறினார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தேசிய பாதுகாப்பு படை மும்பையின் குற்றப் பிரிவிடம் தங்களிடம் எந்த ஒரு கேப்டன் ஷர்மாவும் கிடையாது என்று விளக்கமளித்து ஒரு கடிதத்தை சமர்பித்துள்ளது.

இதனை பெற்றுக்கொண்ட நீதிபதி M L Tahaliyani, இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரி ரமேஷ் மகாலேயிடம் அந்த தீவிரவாதியைக் கொன்றது யார் என்று விசாரிக்க ஆணையிட்டார்.

நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்

--------------------------------------------------------------------------------------------------

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்தும் ATS இன் முன்னாள் தலைவர் மற்றும் இந்த தாக்குதலில் நம் நாட்டிற்காக தன் உயிரை தியாகம் செய்த ஹேமந்த் கர்கரே வின் மரணம் குறித்தும் நமக்கு ஏராளமான சந்தேகங்கள் இருக்கும் நிலையில் இந்த கேப்டன் ஷர்மா என்ற ஒரு புதிய கதா பாத்திரம் இன்னும் அதிக குழப்பத்தை தருகிறது. இந்த வழக்கிலும் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா இல்லை வழக்கம் போல் சட்டத்தின் ஓட்டை மற்றும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி தப்பித்து விடுவார்களா என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். . .

Posted by Wafiq on Tuesday, October 06, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for இல்லாத கேப்டன் ஷர்மா - 26/11 நடந்தது என்ன?

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner