என் வாயை அடைக்கப் பார்க்கிறது ஐ.நா
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஐ.நா வின் சிறப்புத் தூதர் Kai Eide யின் முன்னாள் துணை அதிகாரி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்கு கூறியதாவது, "பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரியிடம் ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கடைசியாக கொடுத்த அறிவுரை, "எதுவும் பேசாதே" என்பது தான்" என்று கூறியுள்ளார்.
அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதின் காரணம், அவர் தன்னுடைய உயர் அதிகாரிகளிடம் ஆப்கானில் நடந்த தேர்தல் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பியது என்று சொல்லப்பட்ட பொது அவர் அதற்கு சம்மதித்தார்.
ஆனால் அதிகாரிகளிடம் அவருடைய பதவி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ஐ.நா குழுவின் நலம் கருதி அவரை பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அறிந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம் "உண்மை அவ்வாறல்ல, தான் தேர்தல் முறைகேடுகள் குறித்த கேள்வி எழுப்பியதால் தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக" கூறினார்.
"ஐ.நா அதிகாரிகளின் நேர்மையற்ற தன்மையை நான் பொறுத்துக்கொண்டு தான் இருந்திருப்பேன், ஆனால் அவர்கள் இந்த அளவிற்கு செல்வார்கள் என்று நான் எதிர்பார்க்க வில்லை" என்று கூறினார்.
ஐ.நா வின் இந்த செயல் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாயை எதிர்க்கும் பல ஆப்கான் மக்களுக்கு ஐ.நா வின் மீதான நம்பிக்கையை குறைத்துவிடும் என்று அவர் மேலும் கூறினார்.
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்.
