அமெரிக்க படைகள் மீது தாலிபான்கள் தீவிர தாக்குதல்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இது பற்றி NATO வின் அறிக்கை கூறுகையில், "அமெரிக்க கூட்டுப்படைகள் இந்த தாக்குதலை வெற்றிகரமாக சமாளித்தனர். இந்த தாக்குதலில் எதிர் தரப்பிற்கு (தாலிபான்களுக்கு) பலத்த சேதம் ஏற்பட்டது. அமெரிக்க கூட்டுப் படைகள் தரப்பில் 8 (?) பேர் உயிரிழந்தனர். ஆப்கான் தேசிய பாதுகாப்பு படையை சார்ந்த 2 பேர் உயிரிழந்தனர்."
ஆனால், தாலிபன் தரப்பு இதைப்பற்றி கூறுகையில், "40 அமெரிக்க மற்றும் ஆப்கான் படை வீரர்கள் உயிரிழந்தனர்" என்று கூறுகின்றனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது, "இந்த தாக்குதலுக்குப்பின் தாலிபான்கள் அந்த மாவட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும், ஒரு போலீஸ் உயரதிகாரி உட்பட 35 ஆப்கான் படை வீரர்களை கைது செய்திருப்பதாகவும்" தெரிவித்தார்.
அந்த பகுதியின் காவல்துறை துணை தலைவர் இதைப் பற்றி கூறுகையில், "அந்த போலீஸ் உயரதிகாரி உட்பட 19 பேரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லை இறந்து விட்டனரா என்பது தெரியவில்லை" என்றும் கூறினார்.
நூரிச்தான் பகுதியின் ஆளுநர் ஜமாலுதின் பதர், தான் கம்தேஷ் பகுதிக்கு அதிகமான பாதுகாப்பு கோரியதாகவும், பாகிஸ்தானின் SWAT பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து அப்பகுதி தாலிபான்கள் அருகிலுள்ள குனார் பகுதிக்குள் ஊடுருவி விட்டனர் என்றும் கூறினார்.
பாதுகாப்பு குறைவாக இருந்தால் இது தான் நடக்கும் என்று அவர் Associate Press இடம் கூறினார்.
சர்வதேசப் படைகளில் கமாண்டர் கொலோனேல் ராண்டி ஜார்ஜ் இந்த தாக்குதல் குறித்து கூறுகையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறினார்.
இது மிகவும் கடினமான பகுதியில் நடந்த கடினமான தாக்குதல். அமெரிக்க மற்றும் ஆப்கான் வீரர்கள் திறமையுடன் இந்த தாக்குதலை எதிர் கொண்டனர். அவர்களுடைய வீரம் மற்றும் திறமையை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று அவர் கூறினார்.
ஜூலை 2008 ல் நடந்த தாக்குதலுக்கு பிறகு இது தான் தாலிபான்கள் அமெரிக்கப் படைகள் மீது நடத்திய தாக்குதல்களில் மிகக் கொடூரமானது.
அமெரிக்க கூட்டுப் படைகள் ஏற்கனவே இந்தப் பகுதியை விட்டு வெளியேறி வேறு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கவனம் செலுத்த முடிவு செய்திருந்தனர்.
100000 அமெரிக்க வீரர்களுக்கு தலைமை தாங்கும் கம்மாண்டர் McChrystal கூறுகையில், இன்னும் அதிகமான படைகள் இருந்தால் மட்டுமே இந்த போரில் வெற்றி பெற இயலும். இல்லையேல் அமெரிக்க படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று அவர் கூறினார்.
இந்த படைகள், வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு அனுப்பப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்கானுக்கு மேலும் 21000 படைகள் அனுப்ப உத்தர விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
அல் ஜசீரா.
