லண்டன் வந்தால் கைது - இஸ்ரேல் துணை பிரதமரின் லண்டன் பயணம் ரத்து.

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


இஸ்ரேலிய துணை பிரதமர் மோஷே யாலொன் தான் செய்த போர் குற்றங்களுக்காக கைது செய்யப்படலாம் என்று அஞ்சி தனது லண்டன் பயணத்தை ரத்து செய்திருக்கின்றார்.

லண்டனில் இயங்கும் பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் தன்னை கைது செய்ய வலியுறுத்தலாம் என்று அஞ்சி அந்தப் பயணத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இவர் 2002 ல் ஹமாசின் முக்கிய தலைவர் உட்பட 15 பொதுமக்கள் மற்றும் 8 குழந்தைகள் கொல்லப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர்.

ஹமாசின் ஆயுதப் பிரிவு தளபதி ஸலாஹ் ஷேதாதே வை கொல்வதற்காக ஒரு டன் எடை உள்ள குண்டினை இஸ்ரேலிய போர் விமானம் காசா நகரத்தின் மீது போட்டது. அதில் ஸலாஹ் ஷேதாதே மற்றும் அவருடைய மனைவி குழந்தைகள் உட்பட அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில் யாலொன் இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.

இஸ்ரேலிய வெளியுறவுத்துறை யாலோனின் இந்த பயணத்தை ரத்து செய்ய அறிவுறுத்தியது. யாலொன் பிரிட்டன் பிரிவு யூத தேசிய நிதி(British branch of the Jewish National Fund) நடத்திய நிதி திரட்டும் விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரிட்டன் செல்ல இருந்தார்.

கடந்த வாரம் இஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் எஹூத் பரக், தன்னை பிரிட்டனில் கைது செய்ய நடந்த முயற்சியை முட்டாள் தனமானது என்று கூறியிருந்தார்.

இவரை காசா மீதான இஸ்ரேலின் மனிதநேயமற்ற தாக்குதலுக்காக கைது செய்ய வேண்டும் என பிரிட்டன் பொதுநல விரும்பிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளை அரசியல் நலம் கருதி பிரிட்டன் அரசு நிராகரித்தது.

நன்றி
அல் ஜசீரா

Posted by Wafiq on Tuesday, October 06, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for லண்டன் வந்தால் கைது - இஸ்ரேல் துணை பிரதமரின் லண்டன் பயணம் ரத்து.

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner