மதுரை அருகே வெடி விபத்து
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்று 6 மணியளவில் பயணிகள் ரயில் ஒன்று 2 ஆவது நடைமேடை வந்து சேர்ந்த போது பயங்கர சத்தத்துடன் இந்த வெடி விபத்து நடந்தது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்ததில், இது தீபாவளி வெடிகளால் ஏற்பட்ட விபத்தாக இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்று கூறினார்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பட்டாசுகளின் காகித துண்டுகள் சிதறிக்கிடந்தன. வெள்ளை பாஸ்பரஸும் வெடி விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூடவே வெடிக்காத நிலையில் உள்ள ஒரு பட்டாசு குண்டுகள் நிறைந்த பையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நன்றி
NDTV
