எகிப்திய பல்கலைகழகங்களில் முகத்திரைக்கு தடை
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
எகிப்தின் அல் அஸ்கர் பல்கலைகழகத்தின் மூத்த தலைவரான முஹம்மத் சையத் தந்தாவி, "முகத்திரைக்கும் இஸ்லாமிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அது அடிப்படைவாதத்தின் அறிகுறி" என்றும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து எகிப்தின் மற்ற பல்கலைகழகங்களும் இதே நிலையை பின்பற்ற தொடங்கியுள்ளன.
பல இஸ்லாமிய அறிஞர்கள் நிகாப் என்ற முகத்திரை இஸ்லாம் கூறிய வரை முறை அல்ல என்றும் இது பழங்குடியினர்களின் வழக்கங்களுள் ஒன்று என்றும் கருதுகின்றனர். இத்தகைய முகத்திரை சவுதி அரேபியா, ஏமன் போன்ற பழமையான நாடுகளில் பொதுவான ஒன்று.
ஆனால் ஷெய்கின் இந்த அறிவிப்பு எகிப்தில் பழமையான இஸ்லாமிய கோட்பாடுகள் பரவுவதை தடுக்கும் விதமான நடவடிக்கைகளை நினைவுபடுத்துவதாக உள்ளது.
19 வயது மாணவியான ஹிலா ஒமர் இது பற்றி கூறியதாவது, "நிகாப் எகிப்திய கலாச்சாரத்தில் உள்ளது அல்ல, ஆனால் தந்தாவி மற்றும் அரசாங்கத்தில் இருப்பவர்கள் இதனை ஏன் அடிப்படைவாத கொள்கை என்று எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறுகிறார்.
உடலை முழுமையாக மறைக்கும் எதனையும் மக்கள் மதிக்க வேண்டும். நான் ஏமன் போன்ற நாடுகளில் வாழ்ந்திருக்கிறேன். அங்கு நிகாப் பொதுவான ஒன்று தான். அனால் இதை ஏன் மக்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. இது அடக்கம் சம்பந்தப்பட்டது" என்று அவர் கூறினார்.
தண்டாவியின் அறிவிப்பு பல சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. அவர் நிகாப் அணிந்த பள்ளி மாணவி ஒருவரை சக மாணவிகள் முன்னிலையில் கடிந்து கொண்டதாக கூறப்படுகின்றன.
தந்தாவி இதனை மறுத்துள்ளார். அவர் இது பற்றி கூறுகையில், நிகாபிர்க்கான தடை பல்கலைகலக வளாகத்தில் மட்டும் தான் என்றும் மற்ற பொது இடங்களில் நிகாப் அணிய தான் மறுப்பு தெரிவிக்க வில்லை என்றும் அவர் விளக்கம் தெரிவித்தார்.
நன்றி,
ABNA.