லெபனானில் இஸ்ரேலிய உளவு கருவிகள் அழிப்பு
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
தெற்கு லெபனானில் மூன்று இஸ்ரேலிய உளவு கருவிகள் அழிக்கப்பட்டன. அதில் இரண்டினை இஸ்ரேல் Remote Detonation (தொலைவில் இருந்து வெடிக்கச்செய்யும் ) முறையில் அழித்ததாகவும் மற்றொன்றை லெபானின் இராணுவம் அழித்ததாகவும் தெரிகிறது. இதனை கடந்த ஞாயிறு அன்று லெபனானின் இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானின் இராணுவ அதிகாரி இந்த சம்பவம் குறித்து, Hula எல்லையில் உள்ள மலைப்பகுதியில் ஒரு கருவியும், அதே மாவட்டத்தில் மற்றொரு கருவியும் கடந்த ஞாயிறு நள்ளிரவில் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு உளவு கருவியினை ஞாயிறு காலை லெபனிய துருப்புக்கள் UNFIL அமைதிப்படையினருடன் சென்று தேடித் பிடித்து வெடிக்கச் செய்தன.
இந்த Electronic Underground Sensor கருவிகளை இஸ்ரேல் 2006 ல் லெபனான் மீது நடத்திய படையெடுப்பில் நிறுவியதாக தெரியவந்துள்ளது. இந்த கருவிகள் மூலம் இஸ்ரேலியர்கள் இங்கு வெகு நாட்களாக உளவு பார்த்து வந்துள்ளனர் என்று லெபனானின் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
UNFIL அமைதிப்படையின் செய்தித்தொடர்பாளர் யாஸ்மினா பௌசியான் கூறுகையில், "அந்த பகுதியில் UNFIL- யின் துருப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய விரிவான விபரங்கள் எதுவும் தெரியவில்லை" என்று கூறினார்.
லெபனிய இராணுவ அதிகாரிகள் கூறுகையில், "இஸ்ரேலின் MK ரக உளவு விமானம் ஒன்றை லெபனிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக சுட்டதாக கூறியுள்ளனர்."
வழக்கம் போல் இஸ்ரேல் இதனை மறுத்துள்ளது.
நன்றி,
ABNA.