தலித்கள் ஆலய பிரவேசம்- போலீசார் துப்பாக்கி சூடு

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது ஊர் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் சுப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

வேதாரண்யம் அருகே உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் தலித்கள் அனுமதிக்கபடுவதில்லை.
File Photo

இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வந்தன. இந் நிலையில் தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆர்டிஓ ராஜேந்திரன் தலைமையில் இன்று தலித்துக்கள் ஆலய பிரவேசம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தலித்துக்களை இன்று காலை ஆர்டிஓ அழைத்து வந்தபோது அதை எதிர்த்து ஊர் மக்கள் திரண்டனர். தலித்துக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கலாட்டா செய்தனர்.

எதிர்ப்பை மீறி தலித்களை போலீசார் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றபோது அவர்கள் மீது கூட்டத்தினர் சரமாரியாக கல் வீச்சு தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் 10 வானத்தை நோக்கி சுட்டனர் . இதையடுத்து கூட்டம் கலைந்து ஓடியது.

அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி,
தட்ஸ்தமிழ்.

Posted by Mohideen on Thursday, October 15, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

1 கருத்துரைகள் for தலித்கள் ஆலய பிரவேசம்- போலீசார் துப்பாக்கி சூடு

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner