இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்!
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
மும்பை: இந்த ஆண்டு இறுதிக்குள் பாதிக்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் மீண்டும் வேலைக்கு ஆட்களை அமர்த்தத் துவங்கிவிடும் என்று மெர்சர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.உலகம் முழுக்க கடும் பொருளாதார நெருக்கடி நிலவியதால், பணியிழப்பு மற்றும் வேலையின்மை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு கடுமையாக இருந்தது. வேலைக்கு ஆட்களை அமர்த்துவதையே பலர் நிறுத்திவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், மெர்சர் இந்தியா நிறுவனம் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்திய நிறுவனங்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவை புதிய பணியாளர்களை அமர்த்தும் பணியைத் துவங்கிவிடும் என்றும், சம்பள உயர்வு உள்ளிட்ட விஷயங்கள் வழக்கம்போல நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கைக்காக, மெர்சர் இநதியா நிறுவனம் இந்தியாவின் 93 பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த ஆய்வின் முடிவுப்படியே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு, போனஸ் போன்ற விஷயங்கள் வரும் ஏப்ரலுக்குள் பழையபடி வழங்கப்பட்டுவிடும் என்றும் அந்த ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்காத அல்லது குறைவான உயர்வைத் தந்த நிறுவனங்கள், அடுத்த நிதியாண்டில் இரண்டு மடங்கு உயர்வைத் தர ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
நன்றி,
தட்ஸ்தமிழ்.