லண்டனில் நடந்த கொடூரம்
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

இவரை இவருடைய சித்தப்பா, மாமா, இவர் மாமாவின் மகன் ஆகியோர் அந்த பெண்ணின் ஐந்தாவது வயதிலிருந்தே கற்பழித்துள்ளனர். இவர் அவருடைய 14 வது வயதில் முதலில் கருத்தரித்துள்ளார்.
பல வருடங்களுக்கு பின்னர் தற்பொழுது தான் இந்த கொடுமை வெளிவந்துள்ளது. இந்த மூன்று குற்றவாளிகளும் சிறையிடப்பட்டுள்ளனர்.
இந்த கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தற்பொழுது 27 வயது. இந்த பெண்ணிற்கு நடந்த கொடுமைகளை அவரின் தாய் மறுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த கார்டிஃப் நீதிமன்றத்திடம், இந்த பெண் கருத்தரித்ததை மறைக்க அவரை ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை அவர்களது சொந்த குழந்தையை போன்று காட்டியுள்ளனர். அந்த பெண்ணை இந்தியாவிற்கு திருமணத்திற்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர்களின் திட்டப்படி அது நடக்கவில்லை.
இந்த கொடுமைகளை அனுபவித்து வந்த அந்த பெண் கடந்தவருடம் தன்னுடைய நண்பர் தைரியம் கொடுத்ததின் பேரில் தனது மவுனத்தை உடைத்து போலீசிடம் புகார் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் சித்தப்பா (55 வயது), மாமா (50 வயது) விற்கு தலா 20 வருட சிறை தண்டனை விததிக்கப்பட்டுள்ளது. இவருடைய மாமாவின் மகனிற்கு 12 வருட காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் குடும்பத்தினர் சட்டத்திற்கு புறம்பாக இங்கிலாந்தில் குடியேறியவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களின் தண்டனைக்காலம் முடிந்ததும் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பெற்றெடுத்த குழந்தைக்கு மரபணு சோதனை செய்யப்பட்டதில் அது அவரின் மாமாவின் குழந்தை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாட்ரிக் குர்ரான் கூறுகையில், அந்த பெண்ணின் மீது நீங்கள் பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதல்லாமல் மற்றவர்களையும் அந்த பெண்ணை காசில்லாத, விருப்பமில்லாத விபச்சாரி போன்று நடத்த ஊக்கமளித்திருக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் அனைவரும் அவரை கூட்டுக் கற்பழிப்பு செய்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
