ஹிந்துத்வாவின் இன்னொரு பரிசு - கோவா
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
கோவாவில் ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் அயல் நாட்டு கைகள் இருப்பதாக சந்தேகிக்கப் படுகிறது.
சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பிற்கும் இந்த குண்டு வெடிப்பிற்கும் தொடர்பு இருப்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு அந்த அமைப்பை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அமைப்பிற்கும் மலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பிரக்யா சிங்கிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மாநிலத்தின் உள்துறை மந்திரி ராம் நாய்க் கூறுகையில், "சில வெளிநாட்டவர்கள் ராமநதியில் இருக்கும் இந்த அமைப்பின் ஆஷ்ரமத்திற்கு அடிக்கடி வந்து போகிறார்கள். நான் அப்பகுதி காவல் நிலையத்தில் விசாரித்தவரை அவர் யாரும் தங்களது C Form களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை" என்று கூறினார்.
சுற்றுலா விசாவில் வரும் வெளி நாட்டவர்கள் அவர்களது C Form களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
"நாங்கள் பல வெளிநாட்டவர்கள் அந்த ஆஷ்ரமத்திற்கு வந்து போவதை கண்டறிந்துள்ளோம். அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் போலீஸார் அங்கு வருகை தரும் வெளிநாட்டவர்களின் விபரங்களை ஆஷ்ரமத்திடம் கேட்டால் அவர்களிடம் அதைப் பற்றி எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என்று கூறுவதாக அவர் கூறினார்.
ராமநதியில் இருக்கும் சனாதன் ஆஷ்ரம் இந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட இந்த இந்துத்துவ தீவிரவாதிகளுக்கும் மலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பெண் தீவிரவாதி பிரக்யா சிங்கிற்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். இந்த இருவரும் சன்ஸ்தான் அமைப்பை சார்ந்தவர்கள். மேலும் இந்த குண்டு வெடிப்பில் Improvised Explosive Device என்ற வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
வழக்கம் போல் சன்ஸ்தா அமைப்பு, இந்த குண்டு வெடிப்பிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வருகிறது.
காவல் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக இது வரை ஒருவர் மட்டுமே கைது செய்துள்ள நிலையில் முறையான கைதுகள் இனி தான் நடத்தப்படும் என்று நாய்க் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக சிலரை போலீஸார் காவலில் மட்டுமே வைத்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு அந்த ஆஸ்ரமத்தின் வெளி நாட்டுத் தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 18 ஆம் தேதியன்று கூட மூன்று பிரான்சு நாட்டினர் அந்த ஆஷ்ரமத்தில் தங்கியுள்ளனர்.
இது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நன்றி,
இந்தியன் எக்ஸ்பிரஸ்
-------------------------------------------------------------------------------------------------
இந்த சனாதன் சன்ஸ்தா அமைப்பு முன்னதாக மகாராஷ்டிராவில் செயல் பட்டு வந்தது. பின்னர் இதன் தளம் கோவாவிற்கு மாற்றப்பட்டதாக தெரிகின்றது. கோவா மாநில அரசு இந்த குண்டு வெடிப்பிர்ற்கும் அப்பகுதில் உள்ள அரசியல் வாதிகளுக்கும் தொடர்பிருக்கின்றதா என்றும் விசாரணை செய்து வருகின்றது
போலீசாரின் கூற்றுப்படி, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் வைத்த நான்கு குண்டுகளில் ஒன்று மட்டும் வெடித்துள்ளது. மற்ற மூன்று குண்டுகளில் இரண்டு Margao வில் செயலிழக்கச் செய்யப்பட்டது, மற்றொன்று Shantadurga கோவிலுக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை செயலிழக்கச் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ராம் நாய்க் கூறுகையில், "நாங்கள் இந்த சம்பவத்துடன் அரசியல்வாதிகள் யாரும் சம்பந்தப்பட்டிருக்கின்றனரா என்று விசாரணை செய்து வருகின்றோம் என்று கூறினார். மேலும், எந்த ஒரு இயக்கமும் அப்பகுதியின் அரசியல் ஆதரவில்லாமல் கோவாவின் அமைதியை கெடுக்க முடியாது" என்று கூறினார்.
தற்பொழுது இந்த விசாரணை சனாதன் சன்ஸ்தாவிற்கும் இந்த குண்டு வெடிப்பிற்கும் உண்டான தொடர்பு பற்றி விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. விசாரணையில் இந்த அமைப்பு மகாராஷ்டிராவில் இருந்து கோவாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு கோவாவை தங்களுடைய தலைமையிடமாக கொண்டு செயல்பட திட்டமிட்டதாகவும் தெரிகின்றது. இதனை DIG. ரவீந்திர யாதவ் தெரிவித்தார்.
காவல் துறையினர் சனாதனின் போண்டா பிரிவு பொறுப்பாளர்களை விசாரணை செய்தனர். அவர்களின் Margao நகரில் உள்ள அந்த அமைப்பின் அச்சகத்தை சோதனையிட்டனர். அந்த சோதனையின்போது அச்சகத்தில் வேலை செய்பவர்களின் பெயர் பட்டியல் போன்ற எந்த ஒரு முறையான ஆவணங்களும் இல்லாதது அந்த இயக்கத்தின் மீது சந்தேகத்தை இன்னும் அதிகபடுத்துகிறது. போலீஸார் அந்த அச்சகத்தை திடீர் சோதனையிட்ட போது அதில் 17 பேர் பணி செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது.
இந்த வழக்கை விசாரணை செய்ய SP.Omprakash Kudtacar தலைமையில் ஒரு சிறப்பு விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவாவது இருட்டில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை சமுதாய வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்களா என்று பொறுத்து இருந்து பாப்போம்.
நன்றி,
டைம்ஸ் ஆப் இந்தியா