தொழுகைக்கு சென்றதால் தூற்றப்பட்ட பெண்மணி
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

கிளர் ராணியா கான், Labour Council உறுப்பினரான இவர் தொழுகைக்கு சென்றதால் அவர் பங்கெடுத்துக் கொண்டிருந்த கூட்டம் சிறிது நேரம் ஒத்தி வைக்கப் பட்டது. இதனால் அவர் தூற்றப்பட்டார். இந்த சந்திப்பு தவும் ஹாலில் நடந்தது.
இதற்கு முன்னதாக் டவர் ஹம்லேட்டில் நடந்த கூட்டத்தில் இவருக்கு தொழுகைக்கு அனுமதிக்கப் பட்டு இவருக்கு 5 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.
ராணியா தொழுகைக்குச் சென்ற பொழுது பார்வையாளர்கள் மடத்திலிருந்து அவருக்கு எதிரான அருவருக்கத்தக்க வார்த்தைகள் கிளம்பின. அவர் தொழுகை முடிந்து வந்ததும், அவரை தூற்றியது மிகவும் வேதனையளிக்கிறது என்று கூறினார்.
லேபர் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினரான ரொனால்ட் ஒஸ்பொர்ன் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் அவரை தூற்றவில்லை, ஆனால் தொழுகைக்காக ஒரு கூட்டத்தை நிறுத்தி வைப்பது சரியல்ல. அது முன்னதாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர் தொழுவதற்காகவா சம்பளம் கொடுக்கப்படுகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓடோடி வந்துள்ளனர். அவர்களை காக்க வைப்பது முறையல்ல" என்றும் கூறினார்.
இதனைப் பற்றி கிளர் கானிடம் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, "நான் மற்ற முஸ்லீம்கள் தொழுவது போல நாளில் ஐந்து வேளையும் தொழ நினைக்கிறேன்.
நான் அரசியல்வாதியாக இருக்கலாம், ஆனால் எனக்கு என் மதமும் முக்கியம். நான் மதியம் 2 மணியில் இருந்து மாலை 7 மணி வரை அந்த கூடத்தில் இருந்துள்ளேன். இது போன்ற ஒரு சூழலில் நான் எந்த வேலையில் இருந்தாலும் எனக்கு 15 நிமிட இடைவேளை பெறுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது" என்று கூறினார்.
"மேலும், நான் ஏற்கனவே முந்தைய தொழுகையை இந்த கூட்டத்தினால் தவற விட்டுள்ளேன், இந்த தொழுகையை சூரியன் மறைவதற்குள் தொழுவது அவசியம்" என்று கூறினார்.
நன்றி
ABNA.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராணியா வேலையை காரணமாக சொல்லி தொழுகையை தவற விடும் நம்மில் பல பேர்களுக்கு நம்மை நாமே திருத்திக்கொள்ள முன்னுதாரணமாக இருக்கிறார்.
