ஹிஜாபிற்காக ஷஹீதான ஷேர்பினி வழக்கு விசாரணைக்கு வருகின்றது.
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

வழக்கறிஞர்கள், 28 வயது நிரம்பிய ரசியாவில் பிறந்து ஜெர்மனியில் வசித்து வந்த அலெக்ஸ்யர்க்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என நாடுகின்றனர். இவன் ஷேர்பினி அவனுக்கு எதிராக ஆதாரங்களை கொடுத்ததால் அவரை 18 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியால் 16 முறை இதயத்தில் குத்தியுள்ளான்.
ஜூலை மாதம் நடந்த இந்த கொடூரச்சம்பவம் இஸ்லாமிய உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர்கள் அவனைப் பற்றி கூறுகையில், "இவன் பிரபலமான முஸ்லிம் விரோத சிந்தனைகளால் தூண்டப்பட்டு இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளான் என்றும் இவனை சோதித்த மன நல மருத்துவர்கள் இவனுக்கு வேறு எந்த மன நல குறைபாடும் இல்லை" என்றும் கூறினர்.
அலெக்ஸ் ஷேர்பினியை தாக்கும் போது அவரின் கணவரையும் கத்தியால் தாக்கியுள்ளான். ஷேர்பினியை காப்பாற்ற சென்ற அவரது கணவரை போலீஸார் தவறுதலாக (?) சுட்டனர்.
அலெக்ஸ் மீது ஷேர்பினியின் கொலை அல்லாமல் அவரது கணவரை கொல்ல முயற்சி செய்தது மற்றும் அவரை கடுமையாக தாக்கியதற்கும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நன்றி
ABNA
