அலிகார் பல்கலைக்கழக மாணவர் சுட்டுக் கொலை
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை மர்ம ஆசாமி ஒருவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்துவதில் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து துப்பாக்கியால் சுட்டார்.
இந்த சம்பவம் அலிகார் ரயில் நிலையம் அருகே நடந்துள்ளது.
இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முஸாபர் சித்திகி கூறுகையில், "அலிகார் பல்கலைகழகத்தில் இறுதியாண்டு B.sc பயின்று வந்த ஷாநவாஸ்-க்கும் அவரை சுட்ட ஆசாமிக்கும் இடையே வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் சுடப்பட்டார்" என்று கூறினார்.
இந்த செய்தி அறிந்ததும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஷாநவாஸ் அனுமதிக்கப்பட்ட AMU மருத்துவ கல்லூரி முன்பு கூடினர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைத்திருப்பதாகவும் கொலையாளி யார் என்பதை போலீஸார் கண்டறிந்திருப்பதாகவும் செய்திகள் உள்ளன. அவனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.
நன்றி,
டைம்ஸ் ஆப் இந்தியா
-------------------------------------------------------------------------------------------
கொலையாளியை கண்டறிந்துவிட்டதாக போலீஸார் கூறியிருப்பினும் கொலையாளி யார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.