செர்பினியின் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ


மர்வா அல் செர்பினியை நீதி மன்றத்தில் வைத்தே 18 முறை கத்தியால் குத்திக் கொன்றவன் மீதான வழக்கு அதே இடத்தில் நடந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கு விசாரணையை காண வந்த பார்வையாளர்கள் செர்பினியின் கொலைக்காக பழி தீர்க்கக் கூடும் என்ற பயத்தினால் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

29 வயதான அலெக்ஸ் செர்பினியை தீவிரவாதி என்றும் விபச்சாரி என்றும் தூற்றியதால் செர்பினி அவன் மீது ஜெர்மனியின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அலெக்ஸ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் அலெக்ஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியினால் மூன்று மாத கர்பிணியான செர்பினிய 18 முறை குத்திக் கொன்றான். இந்த நிகழ்ச்சியின் பொது செர்பினியை காப்பாற்ற சென்ற அவரது கணவருக்கும் கத்திக் குத்து மற்றும் துப்பாக்கி சூடு பரிசாக கிடைத்தது.

இதனை அடுத்து சர்வதேச அளவில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சி அலைகள் கிளம்பின. செர்பினி ஹிஜாபிற்காக உயிர்த்தியாகம் செய்தவர் என்று வர்ணிக்கப்பட்டார்.

இவருடைய கொலை வழக்கின் விசாரணை நீதி மன்றத்தில் வந்ததை அடுத்து பலரும் இந்த வழக்கை உற்று நோக்கியுள்ளனர்.

ஜெர்மனியின் முஸ்லீம் சமூகத்தின் தலைவர் Axel Koehler இது பற்றி கூறுகையில், "நாங்கள் இந்த வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையின் போது செர்பினியின் உறவினர்களும், ஜெர்மனிக்கான எகிப்திய தூதரும் பங்கெடுத்துக்கொண்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜெர்மனி நாட்டின் அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்கப்படும்.
கொலையாளி நீதி மன்றத்திற்கு வரும் போது தன தலையை மறைத்தும் கருப்புக்கண்ணாடி அணிந்தும் வந்தான். நீதிபதி அவன் முகத்தை காட்டுமாறு கூறியபோது தலையின் மறைப்பை மட்டும் அகற்றி தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்ற மறுத்தான். அவனது பெயர் மற்றும் விபரங்களை கேட்ட போது ஒத்துழைக்க மறுத்தான்.

அவனின் இந்த ஒத்துழையாமைக்காக நீதிபதி அபராதம் விதித்தார்.
-------------------------------------------------------------------------------------------------
நீதி நாடி வந்த பெண்ணை குத்திக்கொன்று பின்னர் நீதிமன்றத்தினையும் அவமதித்தவனுக்கு ஆயுள் தண்டனை கூட குறைந்த பட்ச தண்டனை தான்.

Posted by Wafiq on Tuesday, October 27, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for செர்பினியின் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner