மோடி,ரத யாத்திரை பற்றி ஜஸ்வந்த் சிங் பேட்டி
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
குஜராத் மாநிலம் கோத்ராவில் மதக்கலவரம் ஏற்பட்டவுடன் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை பதவியிலிருந்து நீக்கக் கோரினேன் மற்றும் அத்வானியின் ராம் ரதயாத்திராவுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டவருமான ஜஸ்வந்த் சிங் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹைதராபாத்தில் ஆந்திரப்பிரதேச பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய அவர், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயுடன் இணைந்து தாமும் குஜராத் கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்ததாகவும், நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்று கோரியதாகவும் கூறினார்.
1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பாபரி மசூதி குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், அத்வானியின் ரத யாத்திரைக்குத் தான் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறினார்.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் ரத யாத்திரையால் ஏற்படவிருக்கும் விளைவுகளைக் கூறி ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான் மட்டுமே என்றும் அவர் கூறினார்.
தேசிய செயற்குழுவில் நடைபெற்ற ரதயாத்திரை சம்பந்தமான வாக்கெடுப்பில் தான் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தம்முடைய தனியான குரலால் எதனையும் சாதிக்க இயலவில்லை என்றும் அவர் கூறினார்.
நன்றி,
இந்நேரம்.