போலி மெயில் - ஜாக்கிரதை

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

உங்கள் இன்பாக்ஸில் உங்களுடைய வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு வருமான வரி அலுவலகத்திலிருந்து மெயில் வந்திருந்தால் சற்று கவனம். அதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம்.

கொஞ்சம் காலமாக வலை உலகத்தில் உலா வந்து கொண்டிருக்கும் இந்த மெயில்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிக்கொண்டுள்ளது தகவல் தொழில்நுட்பப் பிரிவு. Central Board of Direct Taxes (CBDT) கடந்த புதன் அன்று தாங்கள் அது போன்று எந்த மெயில்களையும் அனுப்பவில்லை என்றும் அது போன்ற மெயில்களுக்கு உங்களை பற்றிய விபரங்களை அனுப்பாதீர்கள் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டது.

அந்த மெயிலில் வருமான வரி செலுத்தியவர்களிடம் அவர்களுக்கு திருப்பித் தர வேண்டிய பணம் இருப்பதாகவும், அதற்காக அவர்களது வங்கி விபரங்களை அனுப்புமாறும் கேட்கப்பட்டிருக்கிறது. இந்த மெயில் ஜோத்பூர், லக்னோ, பரேலி மற்றும் நாட்டின் வேறு பல பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா

Posted by Wafiq on Friday, October 09, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for போலி மெயில் - ஜாக்கிரதை

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner