இந்தியன் ஆயில் ஜெய்ப்பூர் கிடங்கில் பயங்கர தீ விபத்து
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இந்தியன் ஆயில் ஜெய்ப்பூர் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 100000 கிலோ லிட்டர் ஆயில் கொள்ளளவு கொண்ட சிதபுரா இண்டஸ்ட்ரியல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது, இதில் சுமார் 17 பேர் கடும் தீக்காயம் அடைத்தனர்.
இந்த தீ விபத்து சுமார் 10கிலோ மீட்டர் தூரம் வரை தெரிந்தது, இதை அடுத்து அந்த பகுதி முழுவதும் அடர்த்தியான புகை மண்டலம் ஏற்பட்டது . இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர் உடனடியாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதை அடுத்து அப்பகுதி முழுவதும் இருளில் முழ்கியது.
இந்த விபத்தில் சுமார் 24 பேர் இறந்து இருக்க கூடும் என்று சில செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து ஒரு சிறப்பு குழு மும்பையில் இருந்து விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளது.