மதமாற்றத் தடை சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை: சிதானந்த மூர்த்தி

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ


பெங்களூர்: மத மாற்றத் தடை சட்டத்தை அரசு கொண்டுவந்து அமல்படுத்த வேண்டும் என்று எழுத்தாளர் டாக்டர் சிதானந்த மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியது:

அண்மைக் காலமாக கர்நாடகம், கேரள மாநிலங்களில் இந்துப் பெண்களை காதலித்து முஸ்லிம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. கேரளத்தில் இதுவரை 2,629 பேர் காதல் ஜிஹாத் மூலம் மத மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.50 சதவிகிதம் குறைந்துள்ளது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.

மத்திய பிரதேசம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் மத மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மத மாற்றத் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சித்த கங்கா, ஆதிசுஞ்சுனகரி, பெஜாவர் உள்பட 50 மடாதிபதிகளும், ஓய்வு பெற்ற நீதிபதி ரமாஜோயிஸ் உள்பட சட்ட அறிஞர்களும் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத மாற்றம் செய்வது குற்றம் என்று உச்ச நீதிமன்றமும் அறிவித்துள்ளது. பிற மொழி மற்றும் மதத்தின் மீது உள்ள வெறுப்பால் இவ்வாறு கூறவில்லை. இந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடே இதை வலியுறுத்துகிறோம். மத மாற்றத் தடை சட்டத்தை அரசு கொண்டுவரும் பட்சத்தில் அதை எல்லா அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றி,
இந்நேரம்.

---------------------------------------------------------------------------------------------------
லவ் ஜிஹாத் என்றொரு இயக்கமே இல்லை என்று கேரள DGP நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆனால் இவர் அந்த இயக்கத்தின் மூலம் பல பேர் மதம் மாறியதாக கூறுகிறார். மத மற்ற தடை சட்டம், பொது சிவில் சட்டம் போன்ற பொது மக்களின்(தனி மனித) உரிமைகளை பறிக்க கூடிய சட்டங்களை கொண்டு வரச் செய்வதே இவர்களின் நோக்கமாகும்.

Posted by Mohideen on Thursday, November 05, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for மதமாற்றத் தடை சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை: சிதானந்த மூர்த்தி

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner