குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு எதிராக வாக்குமூலம்:

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ


2002, பிப்ரவரி 28, அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் பகுதியில் காவி வெறியர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். அந்த கலவரத்தில் கொலை செய்யப்பட்டவர்களில் முன்னாள் காங்கிரஸ் M.P. இஹ்ஷான் ஜாபிரியும் அடங்குவார். இவர் அவரது குடும்பத்தார்களுக்கு முன்னிலையிலே காவிக் கும்பலால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த கொடூரச் சம்பவம் நடந்து 7 வருடங்கள் கழித்து இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இர்பான் பதான் என்பவர் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

2002 இல் குஜராத் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான இனப் படுகொலையினால் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லீம் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது. இந்த கலவரத்தின் போது அதிகமாக பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளில் குல்பர்க் பகுதியும் ஒன்று. இந்த பகுதியில் நடந்த தாக்குதலில் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்ஷான் ஜாபிரி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

இவர் கொல்லப்படுவதற்கு முன்னர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர எவ்வளவோ பாடுபட்டார். ஆனால், கொலை வெறி மற்றும் காம வெறி பிடித்து அலைந்த காவி கும்பல்களிடம் அது எடுபடவில்லை. இதனால் அவர் அப்பகுதி காவல் நிலையத்திற்கு உதவி கேட்டு அழைப்பு விடுத்தும் காவலர்கள் உதவிக்கு வரவில்லை. (அவர்கள் அவ்வாறே செய்யுமாறு கட்டளையிடப்பட்டுருந்தார்கள் என்பது நாம் அறிந்ததே). தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேறு வழிதெரியாத ஜாபிரி மோடியை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இவரது கோரிக்கையை செவியேற்காத மோடி, இவரை தூற்றியும் உள்ளார். இதனை பதான் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 20 பேரை பதான் அடையாளம் காட்டியுள்ளார்.

மேலும் இர்பான் பதான் கூறியதாவது, "கலவரத்திற்கு பின்னர் அகமதாபாத் போலீசாரிடம் குல்பார்க் பகுதி மக்களை காப்பாற்ற மோடி மறுத்ததையும்" கூறியுள்ளார். ஆனால் போலீஸார் அதனை தங்கள் பதிவுகளில் சேர்க்கவில்லை.

குஜராத் கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிராக நீதிமன்றத்தில் வந்திருக்கும் முதல் சாட்சி இர்பான் பதான் தான்.

கடந்த 7 வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வழக்கு கடந்த செப்டம்பரில் தான் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கைப் போலவே போலீஸார் மேலும் 9 முக்கிய வழக்குகளையும் விசாரித்து வருகின்றனர்.

மோடி மீதான இந்த குற்றச்சாட்டை இர்பான் ஏன் சிறப்பு விசாரணை குழுவிடம் கூறவில்லை என்ற கேள்விக்கு, "நான் என் உயிர்க்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என அஞ்சினேன்" என்று கூறினார்.

மேலும் மறைந்த இஹ்ஷான் ஜாபிரியின் மனைவி தனக்கு நீதி வேண்டும் என கேட்டுள்ளார். அவர், "இது போல் மோடியின் மேல் அதிகமான சாட்சியங்கள் உள்ளன, அதனால் அவரை Narco-analysis எனப்படும் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் இன்னும் அதிகமான உண்மை வெளி வரும்" என்று கூறினார்.

பதானின் இந்த வாக்குமூலத்திற்கு பின்னரும் மோடி இந்த வழக்கில் இன்னும் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை.

நன்றி,
NDTV.

Posted by Wafiq on Thursday, November 05, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு எதிராக வாக்குமூலம்:

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner