அமெரிக்காவை அச்சுறுத்தும் வேலையில்லாத் திண்டாட்டம்!
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உலக வல்லரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் 1983ல் இருந்து முதல் முறையாக 10.20 என்ற இரட்டை இலக்க சதவீதத்தினை தொட்டிருப்பதாக ஆயிவில் தெரியவந்துள்ளது. செப்டம்பர் மாதம் இது 9.80 சதவீகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதகாலத்தில் மட்டும் சுமார் 1,90,000 பேர் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். இது பொருளாதார நிபுணர்களின் கணிப்பான 175,000 என்ற எண்ணிக்கையைவிட அதிகமாகும்.அமெரிக்கா பொருளாதாரம் சரிவிரிலிருந்து மீண்டுவிட்ட அமெரிக்க ஆட்சியாளர்களின் கூற்றிக்கு பதிலடியாக இவ்வாய்வறிக்கை அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.நன்றி,
Press TV.




