லண்டனில் முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

வியாழன் அன்று சுமார் 30கருப்பு மற்றும் வெள்ளை மாணவர்கள் சென்ட்ரல் லண்டனில் உள்ள சிட்டி பல்கலைகழகத்தில் ஆசியா மாணவர்களை தாக்கினர். அவர்கள் இரும்பு தடி மற்றும் கற்களை கொண்டு தாக்கினர். இந்த இனவெறி தாக்குதலில் இரண்டு மாணவர்கள் மற்றும் அவர்களை தடுக்க முயன்ற ஒருவரும் கடுமையாக காயமடைந்தனர்.
The federation of student islamic societies அமைப்பு தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராக முழக்க மிட்டதாகவும் இதனால் பல்கலைகழகம் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு செய்து தர வேண்டும் என்று கோரியுள்ளது.
Qasim Rafiq என்ற The federation of student islamic societies உடைய தகவல் தொடர்பாளர் தெரிவித்ததாவது, "இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் கடந்த ஆண்டு பல்கலைகலத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களாக இருக்ககூடும் என கூறி உள்ளார். மேலும் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என்று காவல் துறை மற்றும் பல்கலைக்கழத்தை கோரியுள்ளார்.
காவல் துறை இந்த சம்பவத்தை அடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு உள்ளனர். Trevor Borley என்ற காவல் துறை அதிகாரி மாணவர்கள் பாதுகாப்புக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் முன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
நன்றி,
ABNA.
