ஜெர்மனிய இனவெறியனுக்கு ஆயுள் தண்டனை
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم

இஸ்லாமிய அடையாளங்களையும்,இஸ்லாத்தினையும், இழிவுபடுத்தியமைக்காக அலெக்ஸ் மீது ஷெர்பினி தொடர்ந்த வழக்கில் அலெக்ஸுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 780 யூரோ அபராதம் விதித்ததனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ் நீதிமன்றத்தின் வெளியிலேயே தான் மறைத்து வைத்திருந்த 7 இன்ச் அளவுகொண்ட கத்தியின் மூலம் ஷெர்பினியை 16 முறை மிகக்கொடூரமாக குத்தி கொலைசெய்துள்ளார். மூன்று மாத குழந்தையை தன் வயிற்றில் சுமந்தவாறே தன் மற்றொரு மூன்று வயது மகனான முஸ்தபா மற்றும் தனது கணவர் எல்வி ஓகாஸ் ஆகியோரின் கண்முன்னே இரத்தம் பீறிட்டவாறே வீர மரணம் எய்தினார்.
உலகமே இவ்வெறிச்செயலைக் கண்டிக்க மேற்கத்திய மற்றும் அதன் சார்பு ஊடகங்கள் வழக்கம்போல் மெளனம் சாதித்தன. ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையினால் இக்கொலைக்காரனுக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதித்து ஜெர்மானிய நீதிமன்றம் நேற்று தீர்பளித்திருக்கிறது. இம்மாதிரியிலான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இத்தண்டனையானது மிக குறைவானதாக் இருந்தபோதிலும் ஓரளவுக்காவது நீதி கிடைத்ததில் ஆறுதல் கொள்வோம். மேற்கத்திய உலகில் தலைவிரித்தாடும் இஸ்லாமோபோபியா என்ற இஸ்லாத்தின் மீதான தேவையற்ற அச்சத்தினை பரப்பிவரும் மேற்கத்திய அரசுகளுக்கும், ஊடகங்களுக்கும் இத்தீர்ப்பானது பேரிடியாக அமைந்துள்ளதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஹிஜாபின் அருமை பெருமை தெரியாமல் ஹிஜாபிற்கு மதிப்பளிக்க தயங்கும் நம் இஸ்லாமிய சகோதரிகளுக்கு மர்வா அல் ஷெர்பினி தக்கதொரு முன்னுதாரணம் ஆவார்.
நன்றி,
அல் அராபியா.
-------------------------------------------------------------------------------------
ஷஹீத் செர்பினி பற்றி பழைய பதிவுகளை படிக்க இங்கு 1 , 2 கிளிக் செய்யவும்.
