இஸ்ரேலுக்கெதிரான பேரணியில் ஜிம்மி கார்ட்டர், நெல்சன் மண்டேலா
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِي

உலகின் மிகப்பெறிய சிறைச்சாலையான காஸாவில் இஸ்ரேல் புரிந்துவரும் அநியாயங்களை தடுக்கவும், கண்டிக்கவும் உலகம் ஏனோ மறுத்துவரும் வேளையில், காஸாவில் நிகழும் அக்கிரமங்களை உலக பார்வைக்கு கொண்டுசெல்லும் முயற்சியாக எதிர்வரும் 27.12.2009 அன்று எகிப்திய தலைநகரான கெய்ரோவிலிருந்து காஸாவை நோக்கி மிகப்பெரிய பேரணி நடத்துவதற்கு உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வேதச இயக்கம் திட்டமிட்டுள்ளது. இவ்வமைப்பானது யூத அமெரிக்க கூட்டணிக்கும் எதிரான அமைப்பாகும். இதில் முக்கிய அம்சமாக இஸ்ரேல் சுமார் 150 அணுகுண்டுகளை வைத்துள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
சுமார் 150 சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இதில் பங்கேற்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் மட்டுமின்றி பல ஹாலிவுட் நட்சத்திரங்களும், பல நாடுகளைச் சார்ந்த உலக புகழ்வாய்ந்த சட்ட வல்லுநர்களூம் பங்கேற்க இருக்கிறார்கள். இப்பேரணியின் போது இஸ்ரேலினால் காஸாவில் உள்ள மக்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும் கண்டிக்கும் விதமாக மிகப்பிரமாண்டமான ஆர்பாட்டமும் நடத்த திட்டமிட்டிருக்கிறது. காஸாவில் இஸ்ரேல் கோரத்தாண்டவமாடிய முதலாம் நினைவு நாளான அன்று ஐரோப்பா, வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவிலும் பேரணிகளும் ஆர்பாட்டங்களும் நடத்தவும் இவ்வமைப்புகள் திட்டமிட்டிருக்கிறது.
நன்றி,
Palestine-Info.
