2009 – 2010 வளைகுடாவில் வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் – ஸ்பெஷல் ரிப்போர்ட்

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

பல வருடங்களின் பெரு வளர்ச்சிக்கு பின் 2009-ல் வளைகுடாவுக்கு இப்படி ஒரு பொருளாதார நெருக்கடி எனும் சுனாமி வரும் என யாரும் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. வங்கிகள் கடன் கொடுப்பதை நிறுத்தி விட்ட, எண்ணைய் விலைகள் குறைந்துள்ள இச்சூழலில் நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்தி கொள்ள ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

இச்சூழலில் வளைகுடா நாடுகளின் 2009ம் ஆண்டை பற்றிய பார்வையும் 2010 ஆம் ஆண்டுக்கான கணிப்பும் இந்நேரம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக தரப்படுகிறது.

பணி நீக்கங்கள்:

2009-ல் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாட்களை சுமார் 10% அதாவது பத்து நபர்களுக்கு ஒருவரை வேலை நீக்கம் செய்துள்ளன. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்சமாக 16% ஆகவும் துறைவாரியாக ரியல் எஸ்டேடில் அதிகபட்சமாக 15% ஆகவும் உள்ளது.

வேலை நீக்கம் – நாடு வாரியாக:



ஐக்கிய அரபு அமீரகம் – 16 %

பஹ்ரைன் – 12 %

குவைத் – 10 %

கத்தார் – 9 %

சவூதி அரேபியா – 7 %

ஓமன் – 6 %


வேலை நீக்கம் – துறை வாரியாக:

ரியல் எஸ்டேட் – 15 %
வங்கி துறை – 13 %
கணிணி துறை – 12 %
விளம்பரம் – 12 %
கல்வி – 11 %
கட்டுமானம் – 10 %
எண்ணைய், எரிவாயு – 10 %
ஹெல்த் கேர் – 8 %
ரீடெய்ல் துறை – 7 %

ஜிசிசி நாடுகளின் பொருளாதார வளர்ச்சி:

கடந்த நான்கு ஆண்டுகளாக 5 முதல் 7 சதவிகிதம் இருந்த ஒட்டு மொத்த ஜிசிசி நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முதல் தடவையாக இவ்வாண்டு எதிர்மறையாக உள்ளது. ஒவ்வோர் நாடும் வெவ்வேறு அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் பாதிப்பின் ஆணிவேராக உள்ள துபாயில் உச்சபட்சமாக கடந்த ஆண்டு 7.4% அளவு இருந்த பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டு -3.5% ஆக குறைந்துள்ளதைக் காணலாம்.

ஜிசிசி கூட்டமைப்பின் பொருளாதார வளர்ச்சி (2005 முதல் 2009 வரை):

2005 - 6.8%
2006 - 5.5%
2007 - 5.6%
2008 - 6.2%
2009 - -0.1%

ஊதிய உயர்வுகள்:

வளைகுடாவில் கடந்த ஆண்டு 11.4% சராசரியாக இருந்த ஊதிய உயர்வுகள் இவ்வாண்டு 6.2% ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சுமார் 60% ஊழியர்கள் இவ்வாண்டு எவ்வித ஊதிய உயர்வும் பெறவில்லை. கடந்த ஆண்டு 33% ஊழியர்கள் தான் ஊதிய உயர்வு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிசிசி – சராசரி ஊதிய உயர்வு:

2005 – 7.0%
2006 – 7.9%
2007 – 9.0%
2008 – 11.4%
2009 – 6.2%

ஊதிய உயர்வுகளை நாடு வாரியாக கணக்கிட்டுப் பார்த்தால் ஓமனில் தான் அதிகபட்சமாக 8.4% ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. எனினும் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.


ஊதிய உயர்வு – துறை வாரியாக:

அக்கவுண்டஸ் & ஆடிட்டிங் – 7.9%
கட்டுமானம் – 6.8%
எண்ணைய் – 6.4%
ஹெல்த்கேர் – 6.1%
வங்கித்துறை – 5.7%
லாஜிஸ்டிக்ஸ் – 5.6%
கல்வி – 5.4%
ரீடெய்ல் துறை – 5.3%
ஹாஸ்பிடாலிடி – 5.1%
தகவல்தொடர்பு(ஐடி) – 4.8%
முதலீட்டு துறை – 3.9%

உலகளாவிய வேலைவாய்ப்பு நிலவரம்:

வளைகுடாவில் வேலை செய்பவர்களில் பாதிக்கும் மேல் வெளிநாட்டவராய் இருக்க, வளைகுடாவில் ஏற்படும் நெருக்கடிகள் உலக வேலைவாய்ப்பு சந்தைகளைப் பாதிக்க கூடியதாக இருப்பதைக் காண்கின்றோம். கடந்த ஓராண்டில் உலக நாடுகள் அனைத்திலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதற்கேற்ப ஊதிய உயர்வும் எல்லா நாடுகளிலும் குறைந்துள்ளது. இவ்வாண்டு இந்தியாவில் தான் அதிக ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும் அது இந்தியாவில் கடந்த ஆண்டு இருந்த சராசரி ஊதிய உயர்வான 13.3% விட பாதிக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஊதிய உயர்வு – உலகளாவிய அளவில்:

இந்தியா – 6.3%
ஜிசிசி – 6.2%
பிலிப்பைன்ஸ் – 4.3%
அமெரிக்கா – 3.7%
கனடா – 2.2%
ஆஸ்திரேலியா – 2.1%
இங்கிலாந்து – 1.5%

ஜிசிசி நாடுகளில் பணி புரிபவர்களின் வெளிநாட்டவர் சதவிகிதம்:

ஐ.அ.அமீரகம் – 90%
கத்தார் – 89%
குவைத் – 81%
பஹ்ரைன் – 59%
சவூதி அரேபியா – 47%
ஓமன் – 33%

2010 பொருளாதர வளர்ச்சி குறித்த கணிப்புகள்:

2010 –ல் அனைத்து ஜிசிசி நாடுகளும் 3 முதல் 4 சதவிகித வளர்ச்சி இருக்குமென்றாலும் கத்தார் மட்டும் 24 சதவிகித வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2010 பொருளாதார வளர்ச்சி:

கத்தார் – 24.5%
குவைத் – 4.4%
பஹ்ரைன் – 4.0%
ஓமன் – 3.9%
ஐ.அ.அமீரகம் – 3.4%
சவூதி அரேபியா – 3.2%

2010 ஊதிய உயர்வு – ஜிசிசி நாடுகளில்:

ஓமன் – 9.7%
சவூதி அரேபியா – 7.0%
கத்தார் – 6.6%
பஹ்ரைன் – 6.4%
ஐ.அ.அமீரகம் – 5.8%
குவைத் – 4.2%

(இக்கட்டுரை வளைகுடாவில் உள்ள பிரபல வேலைவாய்ப்பு தளம் நடத்திய ஆய்வை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது)


நன்றி,
இந்நேரம்.

Posted by Nidur Faizur AMB on Tuesday, December 22, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for 2009 – 2010 வளைகுடாவில் வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் – ஸ்பெஷல் ரிப்போர்ட்

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner