தூக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

தூக்கம் மனிதர்களுக்கு இன்றியமையாத ஒரு வேலை ஆனால் நம்மால் பெரிதாக கவனம் செலுத்தப்படாத ஒன்று. நல்ல தூக்கம் நம்மை உடலளவிலும்,மனதளவிலும் ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் இருக்க உதவுகின்றது.
நம்மில் பலர் நமது வேலைகளை காரணம் காட்டி தூக்கத்தை புறக்கணிப்பது உண்டு. தியாகமில்லாமல் எதுவுமில்லை என்று அதற்கு காரணம் சொல்வதும் உண்டு.ஆனால் தூக்கமின்மையால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பல.
சரியான தூக்கம் இல்லையெனில்,
* நீங்கள் அதிகம் வாக்குவாதம் செய்பவர்களாக மாறுகின்றீர்கள்.
* நம் வேளைகளில் கவனம் செலுத்துவது சிரமாமாக அமையும்.
* களைப்பாக உணர்வீர்கள்
* தலைவலி உண்டாகும்
* மேலும் பொதுவாகவே நீங்கள் நோய்வாய் பட்டதை போல் உணர்வீர்கள்.

இது உங்களை நீங்கள் எந்த வேலைக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்தீர்களோ, அந்த வேலையில் சரியாக செயல்பட முடியாதவராக மாற்றிவிடும்.

இரவில் சரியான தூக்கம் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களை ஆரோக்கியமாகவும்,அழகாகவும் மாற்றுகின்றது என்று ஒரு ஆய்வு கூறுகின்றது.
இந்த ஆய்வினை சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 18 முதல் 31 வயது நிரம்பிய 23 ஆண் மற்றும் பெண்களிடம் சோதித்தனர்.
இவர்களை முதலில் 8 மணி நேரம் தூங்க செய்து அவர்களை புகைப்படம் எடுத்தார்கள். பின்னர், அவர்களை இரவில் 5 மணி நேரம் தூங்க செய்து 31 மணி நேரம் விழித்திருக்கச் செய்தனர்.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் பங்கேற்பாளர்கள் படமெடுக்கப்பட்டனர்.

இந்த புகைப்படங்களை கலவை செய்து 65 நபர்களிடம் பங்கேற்பாளர்களுடைய தோற்றம், ஆரோக்கியம் மற்றும் களைப்பு ஆகியவை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதில் நன்றாக தூங்காத புகைபடங்களுக்கு 19% அதிக களைப்பாகவும், 6% ஆரோக்கியமின்மையாகவும் 4% அழகிய தோற்றம் இல்லாமலும் இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

தூக்கம் என்பது விலை மலிவான சிறந்த அழகு சாதனம் என்று Karolinska Institute ஐ சேர்ந்த பேராசிரியர் John Axelsson தெரிவிக்கிறார்.மேற்கூறப்பட்ட ஆய்வினை நடத்தியது இவரே.

தூக்கமின்மை நாம் கண்களை நன்றாக திறக்காமல் செய்கின்றது. மேலும் முகத்தின் தசைகளை சோர்வடைய செய்கின்றது. படுக்கையின் போது நமது முகத்திர்க்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.
மேலும் தூக்கத்தின் போது நமது உடல் அதிக (மனித வளர்ச்சி) ஹார்மோன்களை சுறக்கின்றது.
இந்த ஹார்மோன்கள் நமது உடலின் குறைபாடுகளை சரிச்செய்ய பெரிதும் உதவுகின்றது.

நல்ல உணவோடு சிறிது உடற்பயிர்ச்சியும் சரியான அளவு தூக்கமும் நம்மை மனதளவிலும்,உடலளவிலும் நமது வேலைகளுக்காக தயார் படுத்தும்.

Posted by Wafiq on Sunday, December 19, 2010. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for தூக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner