விக்கிலீக்ஸ்: காஷ்மீர் கைதிகளை இந்தியா சித்திரவதை செய்தது.
ICRC எனப்படும் செஞ்சிலுவை குழுமம் அமெரிக்க தூதரகத்திற்கு இது தொடர்பான ஆதாரங்களைஅனுப்பியுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறுகின்றது.
விக்கிலீக்கின் கூற்றின்படி 2002 மற்றும் 2004 ஆம்ஆண்டுகளில் காஷ்மீர் சிறைச் சாலைகளை பார்வையிட்ட பொழுது அங்கு அடைக்கப் பட்டிருந்த கைதிகள் மின்சாரம் பாய்ச்சப்படுதல், கடுமையான தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் இதுபோன்ற பல தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுளனர் என்று ICRC கூறியுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவிடமிருந்தோ,அமெரிக்காவிடமிருந்தோ,ICRCஇடமிருந்தோ எந்த விதமான கருத்துக்களும் பதிவு செய்யப்படவில்லை.
காஷ்மீரின் நிலைமை மோசமடைந்திருக்கும் தருணத்தில் இது போன்றதொரு செய்தி இந்தியாவிற்கு அவமானமாக
இருக்கும் என்று கருத்துக்கள் எழுந்துள்ளன.
விக்கிலீக்கின் இந்த செய்தி The Guardian, New York Times போன்ற பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பாலியல் பலாத்காரத்துடன் (?) தொடர்புபடுத்தி விக்கிலீக்கின் நிறுவனர் அஸ்ஸாஞ்சே கைது செய்யப்பட்டது நாம் அறிந்ததே. அந்த வழக்கில் அவருக்கு கடந்த வியாழன் பிணை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் நடந்தாக கூறப்படும் செய்திகள் பற்றி ICRC அமெரிக்க தூதர்களிடம் கூறும் பொழுது , அவர்கள் 177 சிறைச்சாலைகளை பார்வையிட்டதாகவும்,அதிலுள்ள 1491 கைதிகளை சந்தித்ததாகவும் கூறியுள்ளது.
இதில் 852 கைதிகளிடமிருந்து தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக செய்திகிடைத்துள்ளது என ICRC கூறியுள்ளது.
இந்த 852 கைதிகளிடம் கீழ்க்கண்டவற்றில் குறைந்த பட்சம் ஏதாவது ஒருமுறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிகின்றது.
* மின்சாரம் பாய்ச்சப்படுதல்
* தொங்கவிடப்படுதல்
* கால் தசைகளை சிதைத்தல்
* கால் காலை எதிர் திசையில் விரித்தல்
* தண்ணீர் மூலம் சித்திரவதை
* பாலியல் கொடுமைகள்
எவ்வாறென்றால் இது 1990 களில் இருந்த நிலமையை விட பன்மடங்கு சிறந்ததாக இருக்கிறது. 90களில் நிலைமை இதை விட மோசமாக இருந்ததாக ICRCகூறியுள்ளது.
இன்று பாதுகாப்பு பணியினர் அவர் செல்லும் கிராமங்களில் சட்டத்திற்கு புறம்பான சோதனை இடுவதும், அங்கு வசிப்பவர்களை சட்டத்திற்கு புறம்பாக சிறை வைப்பதும் குறைந்துள்ளதாக ICRCகூறியுள்ளது.
இதுவரை விக்கிலீக் ஆப்கான் போர் தொடர்பான 77000 கோப்புகளையும் ஈராக் போர் தொடர்பான 400000 கோப்புகளையும் வெளியிட்டுள்ளது.
