வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு துவங்கியது
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ரமலான் மாதம் துவங்கியதையடுத்து தராவீஹ் எனும் சிறப்பு இரவுத் தொழுகை செவ்வாய்க்கிழமை மாலை முதல் அனைத்து பள்ளி வாசல்களிலும் துவங்கியது.
துபாயில் பிறை தென்பட்டதையடுத்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.
ரமலான் துவங்கியதையடுத்து பல்வேறு வணிக நிறுவனங்களிலும் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
நோன்பையொட்டி அலுவல நேரம் எட்டு மணியிலிருந்து ஆறு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நோன்பாளிகள் நோன்பு திறக்க வசதியாக அரசின் சார்பிலும், சேவை அமைப்புகளின் சார்பிலும் பல இடங்களிலும் டெண்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் சில இடங்களில் இன்று ரமலான் முதல் பிறையாக கணக்கிடப்பட்டுள்ளது.
நன்றி,
தட்ஸ்தமிழ்.
