தமிழகத்தை காப்பற்றிய போலீஸார்.....

குசும்புச் செய்திகள்
=================

தலைப்புச் செய்திகள்
***********************
பல ஆண்டுகளாக தமிழகத்தையே கலக்கிக்கொண்டிருந்த பிரபல கார் கொள்ளையனை நமது போலீஸார் பொறி வைத்து மடக்கிப் பிடித்தனர். விசாரணைக்கு அவரை போலீஸார் அழைத்துச் செல்லும் வழியில் போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்பிக்க முயன்றதால் அவரை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

விரிவான செய்திகள்
**********************
சமீப காலமாக தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வேலையில் தமிழக போலீசார் மும்முரமாக இறங்கியுள்ளனர். இந்த முயற்சியில் அவர்களுக்கு மாபெரும் வெற்றியும் கிடைத்துள்ளது. கடந்த வாரம் சென்னையின் புறநகர் பகுதியில் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு ஒரு அவசர தகவல் கிடைத்தது. அது என்னவெனில் இந்தியா ராணுவத்திற்குச் சொந்தமான இரண்டு வாகனங்களை காணவில்லை என்று. அந்த இரண்டு வாகனங்களும் இந்தியாவிற்காக அமெரிக்காவில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும்.

இந்த அதிநவீன ராணுவ ஜீப்களை ஒரு மர்ம ஆசாமி திருடியதை ராணுவ நிலையத்தில் உள்ள கேமரா பதிவு செய்துள்ளது.
இத்தனை தொடர்ந்து நடந்த விசாரணையில் திருடிய அந்த மர்ம ஆசாமி தமிழகத்தையே பல ஆண்டுகளாக கலக்கிவந்த பிரபல கார் திருடன் கஜ்மல் ஆசாப் என்பதனை நமது போலீஸார் கண்டுபிடித்தனர்.

இந்த கஜ்மல் ஆசாப் கார்த்திருட்டு மட்டுமல்லாது, குழந்தைகளிடம் இருந்து சாக்லேட் பிடுங்கி தின்பது, பள்ளிக்கூடத்தில் சாக்பீஸ் திருடுவது, பூட்டிவைத்த வீட்டு வாசல்களில் அசிங்கம் செய்வது போன்ற பல நெஞ்சை உறையவைக்கும் நாச வேளைகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே உள்ள படத்திலிருப்பவர் தான் தமிழக போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி கஜ்மல் ஆசாப்.


இதனை தொடர்ந்து தமிழகத்திலுள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் உஷார்நிலை ஏற்படுத்தப் பட்டது.

இந்நிலையில் ஒரு சோதனைச்சாவடியை இரண்டு கார்கள் வேகமாக கடந்து சென்றன. சந்தேகம் அடைந்த நமது போலீஸார் அந்த இரண்டு வாகனத்தையும் விரட்டத் தொடங்கினர்.

போலீஸார் அந்த இரண்டு கார்களை விரட்டியதில், அந்த இரண்டு கார்களும் திருடப்பட்ட ராணுவ வாகனங்கள் என்றும் அதனை ஓட்டிச் செல்பவன் பிரபல கார் திருடன் கஜ்மல் ஆசாப் என்றும் கண்டுபிடித்தனர்.


கார் திருடன் கஜ்மல் இரண்டு ராணுவ ஜீப்களை ஒரே நேரத்தில் லாவகமாக கடத்திச் சென்ற காட்சியை படத்தில் காணலாம்.


போலீசார் கார் திருடன் கஜ்மல் ஆசாபை விரட்டிச் சென்ற காட்சி பில்லா பட கார் சேசிங் காட்சி தோற்றுப் போகும் அளவில் இருந்ததாக அதனை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

அந்த இரண்டு கார்களையும் கடத்திச் செல்வது ஒரே ஆள்தான் என்றும் அது பிரபல கார் திருடன் கஜ்மல் ஆசாப் தன் என்றும் அறிந்த போலீசார், அவனை பிடிக்க தீவிர ஆலோசனை செய்தனர்.

அந்த ஆலோசனையில் தமிழகத்தின் முன்னணி காவல் துறை அதிகாரிகளான கேப்டன் விஜயகாந்த், கமாண்டர் சரத்குமார், பல ஆண்டுகளாக இந்தியா உளவுத்துறையான ராவில் பணியாற்றி பின் பதவி உயர்வு பெற்று கான்ஸ்டபில் ஆன அர்ஜுன், மற்றும் இவர்களுடன் சிறப்பு ஆலோசகராக தமிழக காவல் துறையின் பொக்கிஷம் நமது ஏட்டு ஏகாம்பரமும் கலந்துகொண்டனர்.

கலந்தாலோசனையின் முடிவில் கஜ்மல் ஆசாபை பொறி வைத்து பிடிப்பதென முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் கஜ்மல் ஆசாப் கடந்து செல்லக்கூடும் என்று எண்ணப்பட்ட வழிகளில் எல்லாம் பொறி வைக்கப்பட்டது. இத்தனை அறியாத கஜ்மல் ஆசாப் பொறியை தின்பதற்காக நின்ற பொழுது போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

தமிழக காவல் துரையின் உயர் அதிகாரி ஒருவர் கஜ்மல் அசாப்பை மடக்கிப் பிடித்த காட்சி. படத்தில் கைதியின் கை மடங்கி இருப்பதை நீங்கள் காணலாம். போலீஸார் வைத்த பொறியை கைதி சாபிட்டுவிட்டதால் பொறியின் படத்தை பிரசுரிக்க முடியவில்லை. அதற்காக வருந்துகிறோம்.


கைது செய்த கஜ்மல் ஆசாபை விசாரித்த போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெயரிய வந்தன. அது, கஜ்மல் ஆசாப் கார் திருட்டு மட்டுமல்லாது மும்பையில் நடந்த பொட்டு வெடி தாக்குதல், டில்லியில் நடந்த லட்சுமி வெடி தாக்குதல், காஷ்மீரில் நடந்த சங்கு சக்கரத் தாக்குதல் போன்ற பல தாக்குதலை முன்னின்று நடத்தியவன் என்பது தெரிய வந்தது. இந்த தாக்குதல்களில், ஏராளமான அப்பாவி எறும்புகளும் வண்டுகளும் செத்து மடிந்தது நாம் அறிந்ததே.

கைது செய்த கஜ்மல் அசாபுடன் அவர் திருடிய இரண்டு ராணுவ வாகனத்தையும் படத்தில் காணலாம்.



பின்பு ஆசாபை கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் வழியில் போலீசாரை நோக்கி பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார்.

போலீசாரை நோக்கி ஆசாப் துப்பாக்கியால் சுடும் காட்சி. நமது நிருபர்கள் தங்கள் உயிரையும் பனையவைத்துபடம் பிடித்துள்ளனர்.

அவருடைய தாக்குதல்களிலிருந்து தங்களை காக்கும் வன்னம் போலீஸார் ஆசாப் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த எதிர் தாக்குதலை சற்றும் எதிர் பாரத கஜ்மல் ஆசாப் அந்த இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.


போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் அசாப்பை படத்தில் காணலாம்.

மேலும் இவன் வேறு ஏதும் சதித்திட்டம் தீட்டியுள்ளானா என்பதை அறிய போலீஸார் இவன் வீட்டை சோதனையிட்ட பொது அவன் வீட்டிலிருந்து குவியல் குவியலாக ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.



அவன் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களை படத்தில் காணலாம். அதில் அதி நவீன ஏ.கே 007 துப்பாக்கி, பி.கே 420 ரக கைத்துப்பாக்கி, திரவ வடிவிலான தண்ணி மற்றும் தண்ணி பாட்டில், எந்நேரமும் மிஸ்டு கால்கள் கொடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட செல் போன்கள்,பேலன்சு இல்லாத இரண்டு சிம் கார்டுகள், கத்தை கத்தையாய் கள்ளநோட்டுக்கள், 1 2 3 நம்பர் பிரிண்ட் செய்யப்பட்ட காகிதங்கள், ஒரு கொடூரமான சீப்பு மற்றும் போலீசாரை அடித்துக் கொல்வதற்காக வைத்திருந்த ஒரு கல் ஆகியன அடக்கம்.

போலீசாரின் இத்தகைய சேவையினால் தமிழகம் மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பற்றப் பட்டது.


செய்தி
நமது நிருபர்.

Posted by Wafiq on Sunday, August 23, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

1 கருத்துரைகள் for தமிழகத்தை காப்பற்றிய போலீஸார்.....

  1. Anonymous

    அட பாவி மக்கா, என்னோட வேளையை விட்டூட்டு உக்காந்து படிதால் கடைசியில் அது ஒரு டுபாகூரொட செய்தின்னு, என்னோடக் காரை பாத்துகிடனும் பொலிருக்கு

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner