பொருளாதார சரிவினால் அமெரிக்காவில் ஒரே நாளில் 5 வங்கிகள் கவிழ்ந்தன.
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அமெரிக்காவில் 4 ஆம் தேதி மட்டும் 5 வங்கிகள் மூடப்பட்டன. இதோடு மொத்தமாக அமெரிக்காவில் 89 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. பொருளாதாரம் மெதுவாக முன்னேறி வருகின்ற நிலையிலும் வங்கிகளின் சரிவு அதிகரித்துக்கொண்டே வருகின்றது.First Bank of Kansas, InBank, Vantus Bank, Platinum Community Bank மற்றும் First State Bank ஆகிய வங்கிகள் செப்டெம்பர் 4 ஆம் தேதி மூடப்பட்டன.
கடந்த ஆகஸ்டில் அமெரிக்காவில் 15 வங்கிகள் தலைகீழானது. இதுவரை மொத்தமாக 416 வங்கிகள் மூடப்பட்டுள்ளது என்று Federal Deposit Insurance Corporation (FDIC) கூறியுள்ளது.
இதனால் அந்நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் வரலாற்றிலேயே முதன் முறையாக 9.7% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் 216,000 மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
நன்றி
NDTV Profit




