ஆடையை குறைக்கப் போராடும் புரட்சி பெண்மணி (?)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

லுபானா அஹ்மத் அல்-ஹுசைன் என்பவர் சூடானின் ஐ.நா. அலுவலகத்தில் பத்திரிகை அலுவலகராக பணியாற்றி வருகிறார்.
சூடானின் அரசியல் சாசனத்தில் 152 ஆவது பிரிவில் பொது இடங்களில் அநாகரிகமாக ஆடை அணிபவர்களுக்கு 40 சவுக்கடிகள் தண்டனை என்று உள்ளது. இந்த சட்டப் பிரிவை நீக்கவேண்டும் என்று அல்-ஹுசேன் தெரிவித்துள்ளார். ஒரு உணவு விடுதியில் அரசாங்க அதிகாரிகள் திடீர் சோதனையிட்ட போது, இவர் மேலும் 12 பெண்களுடன் கைது செய்யப்பட்டார். மற்ற 10 பெண்கள் தங்களுக்கான தண்டனையை ஏற்றுக்கொண்டனர். 2 பேர் நீதிமன்ற விசாரணையை கோரியுள்ளனர்.
நீதிமன்றத்தில் அவருக்கு $200 அபராதமாக விதிக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை பற்றி அவர் கூறுகையில், "நான் அபராதம் கட்டப் போவதில்லை, அதற்கு பதிலாக நான் சிறை செல்வேன்" என்று கூறியுள்ளார்.
நன்றி
அல்-ஜசீரா
-------------------------------------------------------------------------------------------------
இதை போன்ற புரட்சிப் பெண்மணிகள் (?) சுடானை முன்னேற்ற பாதியில் இட்டுச் செல்வார்கள் போலும். இன்று கால் சட்டை அணிந்து வெளியே வர சுதந்திரம் கேட்பவர்கள் நாளை உள்ளாடை அணிந்து வெளியே வர அனுமதி கேட்டலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இத்தைகைய சமூக முன்னேற்றத்திற்கான முதல் தியாகத்தை (?) தான் அல்-ஹுசெஇன் செய்துள்ளார்.
