நிர்வாணமாக நிற்கிறது அமெரிக்கா

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஆப்கானிஸ்தான், காபூல்.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த 8 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். Armored Group என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர்கள் மது அருந்தி மிகவும் கேவலமான நிர்வாண நிலையில் தங்களை தாங்களே புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதில் குடி போதையில் அரை நிர்வாணமாக உள்ள ஒரு காவலர் ஆப்கானியர் ஒருவரின் முகத்தை பிடித்து மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அந்த படங்களில் அவர்கள் மிகவும் கீழ்த்தரமான நிலையில் நடந்துள்ளதால் அவர் மீது ஒழுக்கத்திற்கு பெயர்போன(?) அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனைப் பற்றி தூதரகம் வெள்ளிக் கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், இதில் மொத்தம் 10 காவலர்கள் அடங்குவர். அதில் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், 2 பேர் ராஜினாமா செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

Armored Group ஐ சேர்ந்த மொத்த நிர்வாகமும் காபூல் நகரத்திலிருந்து மாற்றப்படுகிறது. இதில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி வருவதாக தூதரகத்தின் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் மேலும் கூறுகையில், காவலர்கள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் வரையில் அவர்கள் மது அருந்துவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த சம்பவத்தைப் பற்றி ஹில்லாரி கிளின்டன் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகள்(?) தாக்குதலை மும்முரப்படுத்தியுள்ள இந்தநிலையில், தூதரக காவலர்கள் இவ்வாறு நடந்து கொண்டது தூதரகத்திலுள்ள அனைவரது பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

சென்ற மாதம், தாலிபான் போராளிகள் நடத்திய ராக்கட் தாக்குதலில் ஒரு ராக்கட் தூதரகத்திற்கு மிகவும் அருகாமையில் வந்து விழுந்தது, மற்றும் ஒரு போராளி தன் உடம்பில் கட்டிய குண்டை வெடிக்கச்செய்ததின் காரணமாக 7 பேர் உயிர் இழந்தனர், 100 க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த Armored Group ல் மொத்தம் 450 காவலர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களை 189 மில்லியன் டாலருக்கு 5 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க அரசு பணியமர்த்தியுள்ளது.

நன்றி
அல்-ஜசீரா

Posted by Nisha on Monday, September 07, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for நிர்வாணமாக நிற்கிறது அமெரிக்கா

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner