லண்டனில் முஸ்லீம்கள் பேரணி நடத்த மறுப்பு
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இது பற்றி ராசா கரீம், இஸ்லாமிய மனித உரிமை கழகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பாசிசத்திற்கு எதிராக ஒரு காலத்தில் குரல் கொடுத்து வந்த லண்டன் இன்று பாசிசத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அவலநிலை ஏற்பட்டுவிட்டது" என்று கூறினார்.
இது பற்றி ஸ்காட்லாந்து யார்ட் கூறுகையில், "இந்த பேரணி கட்டுப்பாடு இழந்து வன்முறை செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனை கட்டுபடுத்த நாங்கள் சக்தியற்று இருக்கிறோம். அதனால் தான் இது எல்லை மீறி போகுமுன்னரே நாங்கள் இதனை தடுத்து விட்டோம்" என்று கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள், "1930 களில் இதுபோன்ற ஒரு பேரணி தான் வன்முறை கூட்டமாக மாறி யூத குடியிருப்புகளில் சென்று பெரும் நாசத்தை ஏற்படுத்தியது. இந்த பேரணி அந்த அளவிற்கு ஆபத்து நிறைந்ததாக இல்லாவிட்டாலும், வருமுன் தவிர்ப்பது சிறந்தது" என்று கூறியுள்ளார்.
பொதுவாக புட்பால் ஆதரவாளர்களை கொண்டிருக்கும் EDL பிரிட்டானிய முஸ்லீம்களுக்கெதிராக பல இடங்களில் வன்முறையை தூண்டி வருகிறது. இதுபற்றி தபால் பெட்டியில் பார்க்க ... இந்த EDL லிற்கு British National Party யுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த British National Party வன்முறைகளில் ஈடுபடுவதில் பெயர்போன இயக்கமாகும்.
படத்தில்: English Defence League ஆதரவாளர்
நன்றிஇண்டீபெண்டென்ட்
---------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய உலகில் இஸ்லாமியர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக கூட குரல் எழுப்பக் கூட உரிமையற்றவர்களாகத் தான் நிற்கின்றார்கள்.
