இஸ்ரேலில் பெருகும் லஞ்ச ஊழல்கள்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஊழல் வழக்கில் சிக்கிய இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் யகுத் ஒல்மர்ட் நீதி மன்றத்தில் ஆஜரானார். இவர் மீது மூன்று குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு உள்ளன. இவர் தான் கிரிமினல் வழக்குகளில் சிக்கிய முதல் இஸ்ரேலிய பிரதமராவார்.ஒல்மர்ட் மீது 61 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஏமாற்று வேலை, நம்பிக்கை மோசடி, மற்றும் போலியான ஆவணங்களை பதிவு செய்தல் போன்ற குற்றங்கள் இவர் மீது சுமத்தப் பட்டுள்ளது.
முந்தைய கடிமா கட்சியின் தலைவரான ஒல்மர்ட் தன மீதுள்ள குற்றங்களை நிரூபிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
"நான், குற்றமற்றவன், நீதிமன்றம் என் மீது சுமத்தப்பட்டுள்ள எல்லா சந்தேகங்களையும் கலைந்துவிடும் என்பதில் நான் நம்பிக்கையாக இருக்கின்றேன்" என்று அவர் நீதி மன்றத்தில் நுழையும் போது கூறினார்.
இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் இவர் மே மாதம் 2006 ல் பிரதமர் ஆவதற்கு முன்னால் இவர் செய்ததாக கூறப்படுபவை.
இவர் சட்டத்திற்கு புறம்பாக பணம் நிரப்பிய கடித உரைகளை Morris Talansky என்ற ஒரு யூத அமெரிக்க தொழில் அதிபரிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும், வெளி நாட்டு பயணத்தின் கட்டண சீட்டுகளில் முறைகேடு செய்ததாகவும் குற்றங்கள் எழுந்துள்ளன.
இஸ்ரேலில் லஞ்ச ஊழல் சமீப காலமாக பெருகி வருகின்றது. 3 முன்னால் மந்திரிகள் ஊழல் குற்றத்திற்காக சிறை சென்றுள்ளனர்.
இஸ்ரேலின்முன்னாள் அதிபர் Moshe பல கற்பழிப்பு வழக்குகள், மற்றும் பாலியல் பலாத்காரங்களில் சிக்கி விசாரணையில் உள்ளார்.
கடந்த செப்டம்பர் 1 ல் Avraham Hirshon மற்றும் Shlomo Benizri என்ற மந்திரிகள் ஊழல் வழக்கிற்காக சிறை சென்றுள்ளனர்,.
நன்றி
அல்-ஜசீரா




