15 வயது மாணவியின் ஸ்கார்ப் சக மாணவிகளால் எரிப்பு

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஆஸ்திரியா:
15 வயது மாணவி ஒருவர் தலையில் அணிந்திருந்த ஸ்கார்பிர்க்கு தீ வைத்த இரண்டு மாணவிகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.

இந்த இருவர் டயானா என்ற 15 வயது இஸ்லாமிய மாணவியை அவர்கள் பள்ளி பயணத்தின் போது தாக்கி அவர் அணிந்திருந்த ஸ்கார்பிர்க்கு தீ வைத்தனர். இவர்கள் Catholic charity Caritas என்ற வணிக தொழில் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்று வருபவர்கள்.

பள்ளியின் செய்தி தொடர்பாளர் Harald Schmied இது பற்றி கூறுகையில், "இந்த தாக்குதலுக்கான காரணம் தனிப்பட்ட விரோதம் தான் என்றும் மத சம்பந்தப்பட்ட நோக்கம் ஏதும் இல்லை" என்று கூறினார்.


Schmied மேலும் கூறுகையில், "இந்த தாக்குதலில் ஈடுபட்ட அந்த இரண்டு மாணவிகளும் இனி இது போன்று அசம்பாவிதங்கள் ஏதும் நடந்தால் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எழுத்து மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

"பல வித கலாச்சாரங்களை சார்ந்த மாணவிகள் பயிலும் இந்த கல்வி நிறுவனத்தில் மாணவிகள் ஒருவரோடு ஒருவர் நேசம் பாராட்டி நல்லிணக்கத்தோடு இருக்கிறார்கள் என்றும், எதிர் பாராமல் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் இருட்டடிப்பு செய்யப்படாமல் ஆக்கப்பூர்வமான முறையில் தீர்வு காணப்படுகிறது" என்றும் கூறினார்.

நன்றி
ABNA

Posted by Wafiq on Friday, October 02, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

2 கருத்துரைகள் for 15 வயது மாணவியின் ஸ்கார்ப் சக மாணவிகளால் எரிப்பு

  1. muslim brother

    ஹிஜாப் ஆடை தடைசெய்யப்பட்ட மாற்று மத பாடசாலையொன்றுக்கு செல்லும் இலங்கை முஸ்லிம் மாணவிகள் படும் அவஸ்த்தை. தெருக்களில் ஹிஜாபை களையும் அலங்கோலம்.

    CLICK AND SEE VIDEO
    VIDEO. முஸ்லிம் மாணவிகளின் அவஸ்த்தை

  2. தகவலுக்கு நன்றி

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner