வாஜ்பாய், அத்வானி பயங்கரவாதிகள் - திருமாவளவன்
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِي

பாபர் மசூதி தகர்ப்பு தொடர்பாக 17 ஆண்டு விசாரணை அறிக்கையினை நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணை குழு சமீபத்தில் சமர்ப்பித்திருந்தது. இதன் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகிறது. இவ்விவாதங்களின் போது தமிழகத்திலிருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பங்கு கொண்டு கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே! நேற்றும் இன்றும் லிபரான் அறிக்கை தொடர்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற விவாதங்களை நாடே உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்கிறது. இந்த விவாதங்களுக்குப் பின்னர், அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் நடுநிலையான அரசியல் ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். வழக்கமான கமிசன் அறிக்கைகளைப் போல இதுவும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விடுமோ? என்கிற ஐயமும் பொதுமக்களிடையே உள்ளது.
எனவே அரசு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். ஊருக்குத் தெரிந்த, உலகத்திற்கே தெரிந்த உண்மையைத்தான், 17ஆண்டுகளுக்குப் பிறகு, லிபரான் இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
இதில் புதிய உண்மைகளையோ அதிர்ச்சியடையக் கூடிய புதிய சதிகளையோ கூறிவிடவில்லை. இந்த அறிக்கையில் எமக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. எனினும் துணிவாக சில உண்மைகளை லிபரான் பதிவு செய்துள்ளார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.
குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஸி போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமானவர்கள் என்றும் ஆர்எஸ்எஸ், சிவசேனா, பாரதீய ஜனதா கட்சி ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் திட்டமிட்டே மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனனர் என்றும் அவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் லிபரான் கூறியுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலாவது, இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இது முஸ்லீம்களுக்குக் காங்கிரஸ் கட்சி துரோகமிழைத்ததாக அமையும். இந்த மண்ணில் ராமனின் பெயரால், பாபர் மசூதியை மட்டுமல்ல பெளத்த, சமண மடங்களையும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்து தள்ளி , அங்கே இந்துக் கோயில்களை எழுப்பியுள்ளனர்.
ராமனின் பெயரால் சிவபக்தனான இராவணனையே அழித்திருக்கிறார்கள் என்பதை இராமாயணம் என்கிற புராணத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இராமன் தான் மிகப்பெரிய பயங்கரவாதி என்று தெரிய வருகிறது. அந்த வகையில் இராமனின் வாரிசுகளாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் வாஜ்பாய், அத்வானி, ஜோஸி போன்ற இந்துத்துவப் பயங்கரவாதிகள் அனைவரையும் அரசு உடனே கைதுசெய்ய வேண்டும்.
அமெரிக்காவில் இரட்டைக்கோபுர கட்டிடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது, பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா? அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி போன்றவர்களைப் போலி மிதவாதிகள் என்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகமாகக் கூறுகிறார். எனவே இந்துத்துவப் பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்; மதவெறியர்களுக்கு இதன்மூலம் ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன்" என்று பேசினார்.
நன்றி,
இந்நேரம்.

மனதிற்கும்,நாக்கிற்கும் பூட்டு போட்டு கொண்டு மக்கள் பனத்தில் உல்லாசமாய் பொழுதினை கழிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் முன்பு உண்மையை உரக்க கூறி, அநிதீ இழைத்த கொடிய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கூறிய உண்மை தமிழன் திரு.தொல் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
திரு. பா.கிருச்னகுமார் அவர்கள் கூறியது போல், திரு லிபரான் அவர்கள் அழகான் சவ பெட்டியை தயார் செய்து வைத்துள்ளார் , அழுகிய கணமான இந்துத்துவா பிணத்தினை இனி அடக்கம் செய்ய வேண்டியது லிப்ரானின் வேலையல்ல, இந்துத்துவதினால் பாதிக்கப்பட்ட தலித்துக்கள், இசுலாமியர்கள், கிருச்துவர்கள் மற்றும் நடுனிலை இந்துக்கள் என எல்லோரும் சேர்ந்துதான் அதை சவபெட்டிக்குள் அடக்கி புதைக்க வேண்டும்.
இனி நம் நாட்டில் இனி ஒரு மதக்கலவரமும் , சாதிய வன் கொடுமைகளும் நடந்தேறாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றினைந்து காட்டுமிராண்டி இந்துத்துவாதிகளை இந்த மன்னை விட்டே விரட்டுவோம்.
மால்கம் X -இராசகம்பிரத்தான்
மாகத்மா காந்தியை கொன்றவர்கள், கர்மவீரர் சமுக விடிதலை வீரர் காமராசரை கொலை செய்ய முயன்றவர்கள் இன்னும் நாட்டில் நடக்கும் எல்லா மதக்கலவரங்களுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் காரணமானவர்கள், கடமையுணர்வு கொண்ட உயர் காவல் அதிகாரிகள் கார்கிரே,அசோக் மித்ரே போன்றவர்களை கொலை செய்தவர்களாகிய இந்த காவி தீவிரவாதிகளை இந்த சட்டம் என்னதான் செய்ய போகிறது?
தலித்துகளுக்கான போராட்டம் என்பது இசுலாமியர்களை உள்ளடக்கிய ஒன்று, இசுலாமியர்களும் ,தலித்துகளும் இனைந்த சமுக போராட்டாத்தால் மட்டுமே சமுக விடுதலை காண முடியும் என்று சொன்ன அன்னல் அம்பேத்காரின் வழியில் வந்தவன் நான்.
இசுலாமியர்கள் எனக்கு ஆதரவு தந்தாலும் தராவிட்டாலும் இசுலாமியர்களின் உரிமைக்கான எனது போராட்டம் எப்பொழுதும் தொடரும்.
முகமது ரசுல் வழியுறுத்திய இசுலாமியர்கள் சாதிய மறுப்பு கொள்கையும் , அம்பேத்கர் போராடிய தலித்துகளின் சாதிய எதிர்ப்பு என நாம் ஒரு புள்ளியில் இனைந்து உள்ளோம்.
தலித்துகளுக்கும், இசுலாமியர்களுக்கும் ஒரே எதிரி இந்துத்துவா வெறியர்கள் தான் அவற்றை இம்மண்ணிலிருந்து அப்புறப்படுத்த நாம் இருவரும் இனைந்து போராடுவோம்.
மண்னடியில் தொல் திருமாவலவன் –டிச6 –தலித் இசுலாமிய எழுச்சி பொது கூட்ட உரையிலிருந்து.
மால்கம் X -இராசகம்பிரத்தான்